5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Actor Thalapathy Vijay

Actor Thalapathy Vijay

1992ஆம் ஆண்டு நாளை தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக நடிகராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படத்தில் விஜய்க்கு கை கொடுக்கவில்லை என்றால், செந்தூரப்பாண்டி திரைப்படம் எதிர்பார்த்தப்படி விஜய்யை பிரபலமாக்கியது. 1994ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ரசிகன் படத்தில் தான் விஜய்யின் பெயருக்கு முன்னாள் இளைய தளபதி பட்டம் முதன்முதலில் கிடைத்தது. விஜய்யின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த முதல் படம் பூவே உனக்காக. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, 42 வயது வரை இளைய தளபதி என அழைக்கப்பட்ட நடிகர் விஜய் 2017ஆம் ஆண்டில் இயக்குநர் அட்லீ படம், இவரது அடைமொழியை தளபதி என மாற்றப்பட்டது. மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தான் முதன்முலாக தளபதி என அழைக்கப்பட்டது. மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசிய விஜய் அதன்பிறகு வெளியான தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளை பேசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அரசியல் விஷயங்களை படத்தில் கையில் எடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் அவர் முழு மூச்சாக அரசியலில் களம் இறங்கவும் போகிறார்.

Read More

’சொர்க்கமே என்றாலும்’ வெளியானது கோட் வெர்ஷன் பாடல்!

Sorgame Endralum (GOAT Version) | இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

TVK Conference: விறுவிறுப்பாக செல்லும் த.வெ.க., மாநாட்டு பணிகள்.. என்னென்ன ஸ்பெஷல்?

Tamilaga Vettri Kazhagam: 160 அடி நீளம், 20 அடி உயரத்தில் மாநாட்டு பந்தலில் மேடை அமைக்கப்படுகிறது. மினி சட்டப்பேரவை போல அமைக்கப்படவுள்ள மேடைக்கு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே செல்லும் வகையில் 12 அடி உயரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் நாளில்  திடலுக்கு எந்தவித வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது என  காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay: விஜய்க்கு மீண்டும் சிக்கலா? த.வெ.க கொடியில் யானை சின்னம்.. பகுஜன் சமாஜ் கட்சி எடுத்த திடீர் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, த.வெ.க கொடியில் யானை சின்னத்தை 5 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தளபதி 69 படத்திற்கு இயக்குநர் வினோத்தின் ப்ளான் இதுதானா? வைரலாகும் தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் அவரது கடைசி படமான தளபதி 69 படத்துடன் அவர் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜயின் ’கோட்’ படத்திலிருந்து வெளியான “ஸ்பார்க்” பாடல்!

தளபதி விஜயின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ல் வெளியான திரைப்படம் "தி கோட்". இப்படத்தின் "ஸ்பார்க்" வீடியோ பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வ்ருஷா பாலு இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் வெளியான இப்பாடல் இணையத்தில் புயலாகப் பரவி வருகிறது.

TVK Maanadu: த.வெ.க மாநாடு.. விஜய் எடுத்த அதிரடி முடிவு.. 234 தொகுதிகளுக்கும் பறந்த உத்தரவு!

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழக மாநாட்டி வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. விஜய் கட்சி தொடங்கி நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை விஜய் நியமித்துள்ளார்.

’கோட்’ பட வெற்றி… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

தீவிர அரசியலில் களம் இறங்க உள்ள விஜய் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்ததால் இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் பாடிய ஹிட் பாடல்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவை தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். தற்போது நடிகர் விஜய் பாடி ஹிட்டான பாடல்களின் லிஸ்ட் இதோ.

கோட் VS வேட்டையன்… முதல் நாள் வசூலில் யார் முந்தியது தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்' ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை.

TVK Party: அரசியலில் முதல் வெற்றி.. கவுன்சிலராக பதவியேற்ற த.வெ.க., நிர்வாகி.. மகிழ்ச்சியில் விஜய்!

புதிதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் இன்று பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து துணை மேயராக வியாகத் அலி பதவியேற்று கொண்டார். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். இதில் புதுக்கோட்டை மாவட்ட தமிழக கட்சி கழகத்தின் பொறுப்பாளரான ஃபர்வேஸ்கவுன்சிலராக பதவி ஏத்துக் கொண்டார்.

பூஜையுடன் தொடங்கியது விஜயின் ‘தளபதி 69’ படப்பிடிப்பு – வைரலாகும் போட்டோஸ்

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அது இணையத்தில் வைரலானது.

TVK Party: “அரசியல்வாதியை நம்ப முடியாது” – விஜய்யை அட்டாக் செய்த தமிழிசை!

Tamilaga Vettri Kazhagam: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு அனைத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தை பின்பற்றியே உள்ளது. திமுகவினர் பெரியாரை கும்பிடுவார்கள். ஆனால் நாள் , நட்சத்திரம் பார்த்து தான் எல்லாவற்றையும் செய்வார்கள். நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் எங்களை விட அதிகமாக ஆன்மீக ரீதியாக நல்ல நேரம், ஆடை நிறம், காலம் பார்த்து தான் செய்தார்கள். இதைத்தான் வேண்டாம் என சொல்கிறேன்.

விஜய் விரலில் ‘GOAT’ மோதிரம்… இணையத்தை கலக்கும் போட்டோ!

அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் கடைசி படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோட் என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்துள்ள விஜய், மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

TVK Vijay: “ஏதோ பேருக்கு வந்த கட்சி அல்ல” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முதல் கடிதம்.. மாநாடு குறித்து விளக்கம்!

விஜய் கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு முதன் முதலாக கடிதம் எழுதியுள்ளார். வரும் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TVK Maanaadu: மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. அதிகாலையிலேயே நடந்த பூமி பூஜை.. கலந்து கொண்ட ஆனந்த்!

த.வெ.க மாநாடு: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை இன்று அதிகாலையிலேயே நடந்தது. இன்று காலை 4.30 மணிக்கு பிரம்ம முகூர்தத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கணபதி பூஜை நடத்தப்பட்டு, பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பட்டுத்துணி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் இருந்து புனித நீர் எடுத்து செல்லப்பட்டு பூமி பூஜையும் நடத்தப்பட்டது.