5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
T20 World Cup 2024

T20 World Cup 2024

2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 9வது ஆண்டாக நடக்கவுள்ளது. இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்துகிறது. இந்த வருடத்துக்கான டி20 போட்டொ2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. இந்த டி20 உலகக் கோப்பைக்கு, தகுதி பெறும் 20அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த கட்டத்தில், தகுதி பெறும் அணிகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும், இதில் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இருக்கும்.

Read More

kane williamson: ஒப்பந்தம், கேப்டன் பொறுப்பும் இரண்டும் வேண்டாம்.. கேன் வில்லியம்சன் அதிரடி முடிவு..!

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 2024 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அணி ஒப்பந்தம் மற்றும் ஒரு நாள் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிகள் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Haris rauf : ரசிகருடன் பொதுவெளியில் சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்.. வீடியோ வைரல்..!

பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் அமெரிக்காவில் ரசிகர் ஒருவருடன் பொதுவெளியில் சண்டையிட்டு அடிக்க செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலையில் அந்த ரசிகர் கிண்டல் செய்ததால், அடித்தாகவும், இந்தியர் என்று நினைத்து தான் ஹரிஷ் ராஃப் கோவத்தில் அடிக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

T20 World Cup: சூப்பர் 8 சுற்றுக்கான உலக கோப்பை போட்டி.. எங்கு எப்படி காணலாம்? விவரம் இதோ..!

நடப்பு டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்று 19 ஆம் தேதியான நாளை தொடங்குகிறது.  கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்தது. மொத்தம் 20 அணிகள் 4 குழுக்களாக லீக் சுற்றில் விளையாடின. லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Rahul Dravid: கனடா அணியினரை உற்சாகப்படுத்திய இந்திய தலைமை பயிற்சியாளர்..!

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோத இருந்த போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில்,  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கனடா அணியினரை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்த நிளையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

T20 Worldcup: குரூப் 8 சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிய பாகிஸ்தான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ‘குரூப் - ஏ’ பிரிவில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான் அணி. 2022 -ல் இந்திய அணி வெளியேறியபோது பாகிஸ்தான் அணி போட்ட பதிவை ஷேர் செய்து இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

T20 World Cup: தொடர் வெற்றிகளால் சூப்பர் 8-ல் நுழைந்த இந்திய அணி..!

நியூயார்க்கில் நடைபெற்ற குரூப் ஏ போட்டியில் அமெரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடர் வெற்ற்றிகளின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

Bumra: மனைவி சஞ்சனா கேள்விகளுக்கு பதிலளித்த பும்ரா.. வைரலாகும் வீடியோ..

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, அவருடைய மனைவியும், டி.வி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் பேட்டி எடுத்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

T20 world cup: ஷாகிப் அல்-ஹசனின் ஆட்டத்தை விமர்சித்த வீரேந்திர சேவாக்… காரணம் என்ன..!

பரபரப்பாக நடைபெற்று வரும் T20 உலக கோப்பை போட்டியில் நேற்று ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டிகள் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச ஆணையை குறித்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்நிலையில் வங்கதேச வீரர் ஷாகிப் அல்-ஹசனின் ஆட்டத்தை இந்திய வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

T20 World Cup: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி..!

IND vs PAK, T20 World Cup 2024: கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

IND vs PAK, Weather Update: இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி.. பிட்ச் நிலவரம் என்ன?

India vs Pakistan T20 World Cup match pitch report : டி20 உலக கோப்பை போட்டி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஆடுகளத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டி நடைபெறும் மைதானம் குறித்து வீரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

IND vs PAK: T20 உலக கோப்பை போட்டி.. இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

T20 World Cup 2024 Live Streaming: டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளிவந்த போதுலிருந்து, கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இந்த போட்டியில் வெற்றி பெறும் இலக்குடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

T20 Worldcup: உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் அயர்லாந்தை சுருட்டிய இந்தியா..!

India: T20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை தொடர் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அமெரிக்காவிற்கு சென்றனர். தற்போது அமெரிக்காவில் முதல் சுற்றி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Gautam Gambhir: “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எனக்கு விரும்பம் தான் – கவுதம் கம்பீர்”

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது கம்பீர் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக தேசிய அணிக்கு பங்களிப்பது மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

T20 World Cup: துணை கேப்டனாக ஹர்திக் தேர்வு.. ரோகித் ஷர்மா, அகர்கர் எதிர்ப்பு.. அதிர்ச்சியூட்டும் அறிக்கை..!

T20 World Cup: 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிசிசிஐ மற்றும் மும்பை அணி நிர்வாக தலையீடு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

T20 World Cup: இந்திய அணியின் பயிற்சியாளர்.. டிராவிட் இப்படி ஒரு முடிவா?

Ragul Dravid: 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் நிலையில், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பணியில் இருந்து விலக விரும்புவதாகவும், பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Stories