5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி, முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. 

IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
இந்திய அணி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 28 Jun 2024 03:12 AM

டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2 வது அரையிறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போட்டியில், டாஸ் போடப்பட்டு இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆட்டத்தை தொடங்கினர். வழக்கம் போல், விராட் கோலி 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்டும் 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் சூர்யகுமார் யாதவ் ரோஹித் ஷர்மா உடன் இணைந்து அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

Also Read: NEET: நீட் வினாத்தாள் கசிவு.. பீகாரில் 2 பேர் கைது.. அதிரடி காட்டும் சிபிஐ!

அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 57 ரன்களை விளாசினார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்திக் பாண்டிய 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களும் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தனர். வழக்கம் போல் ஷிவம் தூபே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பவுலிங்கில் பட்டையை கிளப்பிவந்த அக்ஸர் படேல் தன் பங்கிற்கு பேட்டிங்கிலும் 10 ரன்கள் இந்திய அணிக்கா எடுத்து கொடுத்தார். 20 ஓவர் முடிவிற்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தொடங்கினார்கள். ஜோஸ் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பிலிப் சால்ட் 5 ரன்களிலும், மொயின் அலி 8 ரன்களிலும், ஜோனி பேர்ஸ்ர்டோ ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த ஆரி புரூக் 25 ரன்களை கடந்தார். சாம் கரண் 2 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 11 ரன்களிலும், கிரிஸ் 1 ரன் என இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஆர்ச்சர் தன் பங்கிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா சுழலில் சிக்கினார். இறுதியில், 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 103 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

Also Read: T20 World Cup: எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி நாளை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியும் முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள நிலையில், இப்போட்டியினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக உள்ளது.

 

Latest News