PM Modi
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி, 1971ல் குஜராத்தில் ஆர்எஸ்எஸ்-ன் முழு நேரப் பணியாளராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ஆர்எஸ்எஸ் டூ பாஜக என அரசியல் நகர்வுகளை கண்ட அவர், 2001 ஆம் ஆண்டு வரை கட்சிப் படிநிலையில் பல பதவிகளை வகித்து, பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார் . பின்னர்
2001 இல், மோடி குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 2 முறை இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து வெற்றி பெற்றார் மோடி. தற்போது 3வது முறையாக பிரதமர் வேட்பாளராகவும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்