5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரதமர் மோடியின் பயோ பிக் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் சத்யராஜ் விளக்கம்!

Actor Sathyaraj: விழாவில், சத்யராஜ் பேசும்போது கூறியதாவது, சினிமா, எதிர்காலத்தை நோக்கி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் குகன் போன்ற கற்பனை வளம் கொண்டர்கள் அதை எடுத்து செல்வதற்கு முக்கியம். சில படங்கள் நடிகர்களை வைத்து வெற்றி பெறும். சில கதை, வசனத்தை வைத்து வெற்றி பெறும். இன்று படங்களின் வெற்றிக்கு டெக்னிக்கல் விஷயங்களும் முக்கியமாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பயோ பிக் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் சத்யராஜ் விளக்கம்!
நடிகர் சத்யராஜ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 May 2024 15:45 PM

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்‌ஷன் படம் ‘வெப்பன்’. இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று வெப்பன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி மற்றும் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில், சத்யராஜ் பேசும்போது கூறியதாவது, சினிமா, எதிர்காலத்தை நோக்கி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் குகன் போன்ற கற்பனை வளம் கொண்டர்கள் அதை எடுத்து செல்வதற்கு முக்கியம். சில படங்கள் நடிகர்களை வைத்து வெற்றி பெறும். சில கதை, வசனத்தை வைத்து வெற்றி பெறும். இன்று படங்களின் வெற்றிக்கு டெக்னிக்கல் விஷயங்களும் முக்கியமாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.

Also read… 10 நாளில் கவின் ‘ஸ்டார்’ படம் வசூலித்தது எத்தனை கோடிகள் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “எனக்கும், இது புது செய்தி. மோடி பயோபிக்கில் நடிக்க கேட்டு யாரும் என்னிடம் பேசவில்லை.  இப்படி யாரோ எதையோ கிளப்பிவிட்டு விடுவார்கள்.வாய்ப்பு வந்தால் பின்னர் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதா ஏகப்பட்ட படங்களில் ஆன்மிகவாதியாக நடித்துள்ளார்” என்றார். இதனால் இவர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.