5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா கைது.. பெங்களூரு ஏர்போர்ட்டில் சுற்றிவளைத்த போலீஸ்!

Prajwal Revanna Arrest: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி மஜத எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நிலையில், அது தொடர்பாக 3,000 வீடியோக்கள் வெளியாகிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பிரஜ்வல்  ரேவண்ணாவை இன்று நள்ளிரவில்  பெங்களூருவில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படுவார்.

ஆபாச வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா கைது.. பெங்களூரு ஏர்போர்ட்டில் சுற்றிவளைத்த போலீஸ்!
பிரஜ்வல் ரேவண்ணா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 May 2024 07:51 AM

பிரஜ்வல் ரேவண்ணா கைது: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி மஜத எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நிலையில், அது தொடர்பாக 3,000 வீடியோக்கள் வெளியாகிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியானது. மேலும், அருவடை வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாய்த்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாம மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வாக்கு செலுத்திவிட்டு ஜெர்மணிக்கு புறப்பட்டார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 2 முறை லுக் அவுட் நோட்ஸ், ஒருமுறை புளூ கார்னடர் நோட்டீஸ் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதினார்.

இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், ஜெர்மணியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, நேற்று முனிச் நகரில் இருந்து புறப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் பெங்களூருவுக்கு வந்தார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தது. கைதனா பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் CID அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

Also Read: அடித்து தூக்கிய மோடி.. 3வது இடத்தில் திமுக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Recap!

ஒரு மாதமாக தலைமறைவு:

கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பிரஜ்வல்  ரேவண்ணாவை இன்று நள்ளிரவில்  பெங்களூருவில் கைதான நிலையில், இன்று நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படுவார். சிறப்பு புலனாய்வு குழு பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உடடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என பிரஜ்வல் தரப்பு கூறிய நிலையில், நீதிபதி மே 31ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ”வரும் மே 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராவேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன். எனக்கு நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளதால், என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் வெளியே வருவேன். என் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கிறேன். கடவுள், மக்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பொதுமேடைகளில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதால், நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு எதிராக அரசியல் சதி நடந்ததால், நான் என்னை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது” என்றார்.

Also Read: “கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர்” மோடி குறித்து மன்மோகன் சிங் கருத்து!

Latest News