5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lok Sabha Election 2019 Result: அடித்து தூக்கிய மோடி.. 3வது இடத்தில் திமுக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Recap!

India General Election 2019: 18வது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து கட்ட வாக்குகளும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன்பிறகு, இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளுப்போவது யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் முடிவுகளை பார்ப்போம்.

Lok Sabha Election 2019 Result: அடித்து தூக்கிய மோடி.. 3வது இடத்தில் திமுக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Recap!
மோடி – ராகுல் காந்தி – ஸ்டாலின்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 May 2024 16:54 PM

2019 தேர்தல்: 18வது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து கட்ட வாக்குகளும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன்பிறகு, இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளுப்போவது யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் முடிவுகளை பார்ப்போம். அதன்படி, 2019 தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 22 கோடியே 90 லட்சத்து 76 ஆயிரத்து 879 (37.36%) வாக்குகள் பெற்று 303 இடங்களில் தனது வெற்றியை பதிவு செய்தது. 303 இடங்களில் வென்றது மட்டுமில்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது.அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 52 இடங்கள் பெற்று தோல்வி அடைந்தது.

பாஜக வென்ற 303 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் குறைவாக வாக்குகள் வித்தியாசத்தில் 77 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட இடங்கள் 30 ஆகும். அதே நேரத்தில் பாஜக 50 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் வென்ற தொகுதிகள் 40 ஆகும்.

தமிழ்நாடு நிலவரம்:

கடந்த தேர்தலில் பாஜக 303, காங்கிரஸ் 52, திமுக 24, திரிணாமூல் காங்கிரரஸ் 22 இடங்களில் வென்றது மூலம் திமுக 3வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் இருக்கிறது. கடந்த 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இருந்தன. அதேபோல, UPA கூட்டணியில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இவற்றில் திமுக 32.7 சதவீத வாக்குகளை பெற்று, 23 இடத்தில் வென்றது. திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம் தலா இரு இடத்திலும், விசிக ஓரிடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஓரிடத்திலும் வென்றிருக்கிறது. காங்கிரஸ் 12.76 சதவீத வாக்குகளை பெற்று எட்டு இடங்களில் வென்றது. என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக 3.66 சதவித வாக்குகளை பெற்று ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வென்றிருக்கிறது.

Also Read: “தியானம் செய்ய கேமரா எதுக்கு”? மோடியின் குமரி விசிட் குறித்து மம்தா கிண்டல்!

மாநில வாரியான நிலவரம்:

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரசேதம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 2019ல் நிலவரத்தை பார்ப்போம். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதியில் இருக்கும் உத்தர பிரசேதத்தில் பாஜக 49.5 சதவீத வாக்குகளை பெற்று, 62 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் 67 இடங்களில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6.3 சதவீத வாக்குகளுடன் ஓரிடத்தில் வென்றது. மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணியில் பாஜக 27.59 சதவீத வாக்குகளை பெற்று, 23 இடங்களில் வெற்றி பெற்றது.

அந்த கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி 18 இடங்களில் வென்றது. UPA கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம், 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 16.27 சதவீத வாக்குகளுடன் ஓரிடத்தில் வென்றது. மேற்கு வங்கத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 43.28 சதவீத வாக்குகளுடன் 22 இடங்களில் வென்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 5.61 சதவீத வாக்குகளை பெற்று இரு இடத்திலும், என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக 40.25 சதவீத வாக்குகள் பெற்றி 18 இடங்களில் வென்றது.

26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜக அனைத்து தொகுதிகளில் வென்று 62.21 சதவீத வாக்குகளை அறுவடை செய்தது. காங்கிரஸ் கட்சி 32.11 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 40 தொகுதிகளை கொண்ட பீகாரில் பாஜக 17 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரரஸ் ஒரு இடத்தில் வென்றது. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பாஜக 24 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 34.24 சதவீத வாக்குகளை பெற்று ஓரிடத்தில் கூட வெல்லவில்லை.

2014, 2019 தேர்தலில் பாஜக அடுத்தடுத்து வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என அக்கட்சி தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். அதே சமயம், பாஜகவின் வெற்றிக்கு எங்களுடைய கூட்டணி முட்டுக்கட்டையாக இருக்கும் என I.N.D.I.A கூட்டணி கூறி வருகிறது. இருப்பினும், ஜூன் 4ஆம் தேதி பாஜக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா அல்லது காங்கிரஸ் இழந்த மக்கள் செல்வாக்கை பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: 48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு.. ஸ்கெட்ச் போடும் I.N.D.I.A கூட்டணி

Latest News