5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர்” மோடி குறித்து மன்மோகன் சிங் கருத்து!

Manmohan Singh: பிரதமர் மோடி குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார். பஞ்சாபில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் பதவியின் ஈர்ப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடி. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில், கடந்த காலத்தில் எந்தப் பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, வார்த்தைகளை கூறியதில்லை" என்றார்.

“கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர்” மோடி குறித்து மன்மோகன் சிங் கருத்து!
மன்மோகன் சிங்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 May 2024 17:19 PM

மன்மோகன் சிங் கடிதம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இதுவரை 6 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவானது வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே, பிரதமர் மோடி குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார். பஞ்சாபில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

“கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர்”

அக்கடிதத்தில்,“இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அரசியல் உரையாடல்களை உன்னிப்பாகப் கவனித்து வருகிறேன். மோடி மிகவும் வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். சமூகததில்  பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்.  சொற்பொழிவின் கண்ணியத்தையும், அதன் மூலம் பிரதமர் பதவியின் ஈர்ப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடி. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில், கடந்த காலத்தில் எந்தப் பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, வார்த்தைகளை கூறியதில்லை.

Also Read: 48 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு.. ஸ்கெட்ச் போடும் I.N.D.I.A கூட்டணி

என்னை பற்றியும் சில பொய்கை கூறியிருக்கிறார். என் வாழ்க்கையில் மற்ற சமூகத்தை தனித்து பார்த்ததில்லை. பாஜக தான் அப்படி பார்க்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக பிரதமர் மோடி கூறியதைத் தாக்கிய மன்மோகன் சிங், “கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை குறைந்தே இருப்பதாக கூறினார். டெல்லியின் எல்லையில் பஞ்சாபைச் சேர்ந்த 750 விவசாயிகள் பல மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தனர்.

அவர்களை நோக்கி லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் பாய்ந்தது. இதோடு, பிரதமர் விவசாயிகள் குறித்து மோசமாக பேசினார். அவர்களை பர்ஜீவிகள் ‘ (ஒட்டுண்ணிகள்) என்று அழைத்தார். ஆயுதப்படைகள் மீது அக்னிவீர் திட்டத்தை பாஜக திணிப்பதாகவும், அதை தவறான எண்ணம் கொண்டதாக முத்திரை குத்துவதாகவும் விமர்சித்தார். பாஜக தேசபக்தி, வீரம் மற்றும் சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அதன் மதிப்பை வெறும் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தி பாஜக போலி தேசியவாதத்தை காட்டுகிறது. ஆயுதப்படை மூலம் தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று கனவு காணும் விவசாயியின் மகனான பஞ்சாப் இளைஞர்கள், இப்போது 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கிறார்கள். அக்னிவீர் திட்டம் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: அடித்து தூக்கிய மோடி.. 3வது இடத்தில் திமுக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Recap!

Stories