5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு.. மோடி டூ ரஜினி பங்கேற்பு!

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க உள்ளார். ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்கும் நிலையில், விழா ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1995ஆம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.  பின்னர், ஆந்திர பிரதேசம் இரண்டாக பிரிந்த பிறகு, 2014ஆம் ஆண்டு 117 இடங்களை கைப்பற்றி மீண்டும் சந்திரபாபு நாயுடு முதலமைச்சரானார். தற்போது அவரது கட்சி வெற்றிபெற்றதையடுத்து மீண்டும் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் சந்திரபாபு நாயுடு. 

ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு.. மோடி டூ ரஜினி பங்கேற்பு!
சந்திரபாபு நாயுடு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Jun 2024 07:58 AM

முதல்வராக இன்று பதவியேற்கும் சந்திரபாபு: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வெறும் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திராவில் 21 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க உள்ளார்.

Also Read: மோடி 3.0.. மத்திய அமைச்சரவையில் இலாக்காக்கள் அறிவிப்பு.. யாருக்கு எந்த பொறுப்பு?

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்கும் நிலையில், விழா ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11.27 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம் கன்னவரத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேசரபள்ளி ஐடி பார்க் அருகே உள்ள மைதானத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி பங்கேற்பு:

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமான இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 10.40 மணிக்கு கன்னவரம் விமான நிலையத்தை வந்தடையும் மோடி, 10.55 மணிக்கு ஐடி பூங்காவிற்கு சென்றடைவார். 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, விமான மூலம் ஒடிசா செல்ல உள்ளார். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் விழாவை சிறப்பிக்க உள்ளனர் .  பவன் கல்யாணின் மூத்த சகோதரரான சிரஞ்சீவி, அவரது மகனும், நடிகருமான ராம் சரணும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள்.

2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்றத்தில் 151 இடங்களையும், மக்களவைத் தேர்தலில் 22 இடங்களையும் கைப்பற்றியது. 1995ஆம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.  பின்னர், ஆந்திர பிரதேசம் இரண்டாக பிரிந்த பிறகு, 2014ஆம் ஆண்டு 117 இடங்களை கைப்பற்றி மீண்டும் சந்திரபாபு நாயுடு முதலமைச்சரானார். தற்போது அவரது கட்சி வெற்றிபெற்றதையடுத்து மீண்டும் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் சந்திரபாபு நாயுடு.

Also Read: முடிந்தது நட்டாவின் பதவிக்காலம்.. பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

Latest News