5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Modi Cabinet: மோடி 3.0.. மத்திய அமைச்சரவையில் இலாக்காக்கள் அறிவிப்பு.. யாருக்கு எந்த பொறுப்பு?

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்பு, மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது,  பிரதமர் மோடி உள்பட 72 பேர் நேற்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், இன்று அவர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

PM Modi Cabinet: மோடி 3.0.. மத்திய அமைச்சரவையில் இலாக்காக்கள் அறிவிப்பு.. யாருக்கு எந்த பொறுப்பு?
பிரதமர் மோடி அமைச்சரவை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 20:31 PM

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்பு, மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது,  பிரதமர் மோடி உள்பட 72 பேர் நேற்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், இன்று அவர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அஜய் தம்தா, ஹல்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் நிதின் கட்கரிக்கு இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறுவுத்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முழு பட்டியல்:

  • ஜெ.பி.நட்டாவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது
  • சிவராஜ் சிங் சவுகானுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் மற்றும் பஞ்சாய்த்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு வெளியுறுவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பியூஷ் கோயலுக்கு வணிக வரித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தர்மேந்திர பிரதானுக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • எச்டி குமரசாமிக்கு கனராக தொழில்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜிதன் ராம் மஞ்சிக்கு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ராஜீவ் ரஞ்சன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சர்பானந்தா சோனோவாலுக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வீரேந்திர குமாருக்கு சமூக நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ராம்மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிரஹலாத் ஜோஷிக்கு உணவு மற்றும் மாற்று எரிசக்தி அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜுவல் ஒரம்மிற்கு பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிரிராஜ் சிங்கிற்கு ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அஸ்வினி வைஷ்ணவுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் ரயில்வேத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜோதிராதித்யா எம்.சிந்தியாவுக்கு தொலைத்தொடர்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பூபேந்தர் யாதவுக்கு சுற்றுச்சூழல், வன, காலநிலைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கலாச்சார மற்றும் சுற்றலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அன்னபூர்ணா தேவிக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிரண் ரிஜிஜுக்கு நாடாளுமன்ற விவகார மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஹர்தீப் சிங் பூரிக்கு பெட்ரோலியத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மன்சூக் மாண்டவியாவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு தொழிலாளர் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜி. கிஷண் ரெட்டிக்கு நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிராக் பாஸ்வானுக்கு உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிஆர் பாட்டீலுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அமைச்சர்கள் (சுயேச்சை பொறுப்பு)

  • ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்தின் மாநில அமைச்சர், திட்டமிடல் அமைச்கத்தின் மாநில அமைச்சர், கலாச்சார அமைச்சரின் இராஜாங்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜிதேந்திர சிங்கிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாநில அமைச்சர், புவி அறிவியல் அமைச்சகத்தின் மாநில அமைச்சர், பிரதமர் அலுவலகத்தில் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பதவியும், அணுசகத்தித் துறையின் இணையமைச்சர் பதவிம், விண்வெளித்துறையின் இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
  • அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணையமைச்சர், நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெயந்த் சவுத்ரிக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைசகத்தின் இணையமைச்சர், மற்றும் கல்வி அமைச்சரின் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

Latest News