5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முடிந்தது நட்டாவின் பதவிக்காலம்.. பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக தேசிய தலைவராக பதவி வகித்த வந்த அமித்ஷா, மோடி அமைச்சரையில் உள்துறை அமைச்சராக மாற்றப்பட்ட பிறகு நட்டாவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைய இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் மோடி அமைச்சரவையில் நட்டா இடம்பெற்றுள்ளார்.

முடிந்தது நட்டாவின் பதவிக்காலம்.. பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?
பிரதமர் மோடி – நட்டா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 11 Jun 2024 09:27 AM

முடிந்தது நட்டாவின் பதவிக்காலம்: 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். அவருடன் 71 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. அதில், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களும் பதவியேற்றனர். பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், நேற்று அவர்களின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியும், ஜெய்சங்கருக்கு வெளியுறுவுத்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் ஜெ.பி.நட்டா இருக்கும் பட்சத்தில், பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார் இருப்பார் என கேள்வி எழுந்துள்ளது. பாஜக தேசிய தலைவர் பொறுப்புக்கு முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இவர்கள் இரண்டு பேரும் தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதனால், இவர்களால் இரண்டு பதவிகளில் இருக்க முடியாது.

பாஜக சட்டப்படி இரண்டு பொறுப்புகளில் ஒருவர் நீடிக்க முடியாது என்பதால் இவர்களுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படாது.  இவர்களை தவிர மேலும் நான்கு பெயர்களை தேசிய தலைவர் பதவிக்கு கட்சிக்கு வட்டாரத்தில் பேசப்படுகிறது.  அதாவது, வினோத் தாவ்டே, அனுராக் தாக்கூர், சுனில் பன்சால், ஓம் பிர்லா ஆகியோரின் பெயர் அடிப்படுகிறது. எனவே, இவர்களில் ஒருவர் பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மோடி 3.0.. மத்திய அமைச்சரவையில் இலாக்காக்கள் அறிவிப்பு.. யாருக்கு எந்த பொறுப்பு?

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் இருந்து ஐந்து முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கடந்த முறை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த அவருக்கு இந்த முறை எதுவும் வழங்கப்படவில்லை. இமாச்சல பிரதேசத்தைச் நட்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் இவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோட் தாவ்டே மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

தற்போது, ​​பீகார் மாநிலத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள அவர், மக்களவை பிரச்சாரத்தின் போது பல முக்கிய பொறுப்புகளை கையாண்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 17வது மக்களவை சபாநாயகராக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லாவிற்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக தேசிய தலைவராக பதவி வகித்த வந்த அமித்ஷா, மோடி அமைச்சரையில் உள்துறை அமைச்சராக மாற்றப்பட்ட பிறகு நட்டாவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைய இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் மோடி அமைச்சரவையில் நட்டா இடம்பெற்றுள்ளார்.

Also Read: தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் என்னென்ன?

Latest News