5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Guruvayoor Ambalanadayil: படமே காப்பியா? சர்ச்சையில் சிக்கிய குருவாயூர் அம்பல நடையில் படம்.. யூடியூப் சேனல் போட்ட வழக்கு!

Nakkalites Youtube channel: இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது.அதில் படம் பார்த்த பலரும் நக்கலைட் சேனலின் பாய் பிரண்ட் அலப்பறைகள் எபிசோட் கதையை மாற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கவே தற்போது பிரச்சினை பெரிதாக தொடங்கியுள்ளது.

Guruvayoor Ambalanadayil: படமே காப்பியா? சர்ச்சையில் சிக்கிய குருவாயூர் அம்பல நடையில் படம்..  யூடியூப் சேனல் போட்ட வழக்கு!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 11 Jul 2024 16:58 PM

குருவாயூர் அம்பல நடையில்: சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் நடிப்பில் “குருவாயூர் அம்பல நடையில்” என்ற படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.ஆனால் இந்தப் படம் தமிழில் பிரபல youtube சேனலாக திகழும் நக்கலைட்டின் கதை என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நக்கலைட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் குருவாயூர் அம்பல நடையில் பட குழுவினருக்கு கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் தங்களுடைய வீடியோக்களை திரைப்படமாக எடுக்க நக்கலைட் குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அந்தக் கதையை சற்று மாற்றி திரைப்படம் வெளியாகி இருப்பதை சட்டரீதியாக அணுக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: Tirumala Tirupati: திருப்பதி பக்தர்களே உஷார்.. அதிர வைத்த பகீர் மோசடி.. போலீசார் அதிரடி!

ரசிகர்களை கவர்ந்த படம்

கடந்த மே 17ஆம் தேதி விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ், நிகிலா விமல், பசில் ஜோசப், அனஸ்வரா ராஜன், யோகி பாபு, ரேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் குருவாயூர் அம்பல நடையில். பிரித்விராஜ் சொந்தமாக தயாரித்த இப்படத்திற்கு அங்கீத் மேனன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் கதை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது.

அதாவது காதல் தோல்வியால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பசில் ஜோசப்புக்கு பிரித்விராஜின் தங்கை அனஸ்வராவுடன் திருமணம் முடிவாகிறது. இதனிடையே தங்கை கணவருடன் செல்போன் மூலமாக பேசி நல்லுறவை வளர்த்துக் கொள்கிறார் பிருத்விராஜ். அதே சமயம் பிரித்விராஜ் தனது மனைவி நிகிலா விமலை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார். ஊருக்கு திருமணத்திற்காக வரும் பசில் ஜோசப் பிரித்விராஜ் மனைவியுடன் சேர்ந்து தன்னை வாழ்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.

Also Read: Siragadikka Aasai: நகை விஷயத்தில் வசமாக சிக்கிய மனோஜ்… தூள் பறக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்!

ஆனால் தன்னுடைய முன்னாள் காதலி தான் பிரித்விராஜ் மனைவி என்ற உண்மை பசில் ஜோசப்புக்கு தெரிய வருகிறது. இதனால் திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்.ஒரு கட்டத்தில் பிரித்விராஜூவுக்கும் இந்த உண்மை தெரிய வர திருமணத்தை நிறுத்த நினைக்கிறார். ஆரம்பத்தில் திருமணத்தை நிறுத்த முடிவு செய்த பசில் ஜோசப் அனஸ்வரா ராஜன் தன்னை மணமுடிப்பதில் உறுதியாக இருப்பதை தெரிந்து கொண்டு திருமணத்தை நடத்த நினைக்கிறார் இந்த இருவரில் யாருடைய எண்ணமென்றது என்பதை படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது.அதில் படம் பார்த்த பலரும் நக்கலைட் சேனலின் பாய் பிரண்ட் அலப்பறைகள் எபிசோட் கதையை மாற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கவே தற்போது பிரச்சினை பெரிதாக தொடங்கியுள்ளது.

Latest News