5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Tamil Movie Updates

Tamil Movie Updates

இந்திய திரையுலகில் தமிழ் சினிமாவின் பங்கு மிகப்பெரியது ஆகும். ஊமை படம், கருப்பு வெள்ளை என பயணித்த தமிழ் சினிமா எப்போதும் அடுத்தக்கட்டத்தை நோக்கி தன்னை தயார்படுத்துக்கொண்டே இருக்கிறது. கோலிவுட் என்பது வெறும் தமிழ்நாடோடு மட்டுமின்றி உலக சினிமாக்களை நோக்கி பயணிப்பதும் நடப்பதுண்டு. உலக சினிமா திருவிழாக்களில் தமிழ் படங்கள் இடம்பெறுவதும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபெறுவதும் அதற்குண்டான சான்று. திறமை இருப்பவர்களுக்கு தமிழ் சினிமா என்றுமே கைகொடுக்கும் என்பதற்கு சான்றாக எத்தனையோ புது முகங்கள் நடிகர்களாகவும், திரைத்துறை பின்புலம் இல்லாதவர்கள் திரையுலக கலைஞர்களாகவும் இங்கு ஜொலித்துள்ளனர். ஜொலித்தும் வருகின்றனர். வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி சினிமா மூலம் அரசியல், வாழ்வியல், வரலாறு, கலாசாரம் என அனைத்து விஷயங்களும் மக்களிடையே கொண்டு செல்லப்படுவதும் தமிழ் சினிமாவுக்குண்டான சிறப்பு. இப்படியான தமிழ் சினிமாவின் ஒவ்வொரு நாள் அப்டேட்டும், நடிகர் நடிகைகள் அறிவித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், சினிமா செய்திகளும் இங்கு இடம்பெறுகின்றன.

Read More

பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’ படத்திலிருந்து ‘வச்சு செய்யுதே’ வீடியோ பாடல் இதோ

Vechi Seyyuthey Video Song | ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை எஸ்.ஜே. சினு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சன்னி லியோனும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Today’s Cinema News: சித்தார்த் -அதிதி திருமணம் முதல் வேட்டையன் அப்டேட் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் செய்துகொண்டது முதல் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வரை இன்று செப்டம்பர் மாதம் 16-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

தேதி குறிச்சாச்சு… வேட்டையன் இசை வெளியீட்டு விழா – படக்குழு வெளியிட்ட அப்டேட்

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதி மற்றும் இடம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

2024ல் இதுவரை எப்படி? தமிழ்நாட்டில் நல்ல வசூல் கொடுத்த திரைப்படங்கள் லிஸ்ட்!

Top collection movies: 2024 ஆம் ஆண்ட் தமிழ்நாட்டில் அதிகமாக வசூலை அள்ளிச்சென்ற திரைப்படங்கள் லிஸ்ட் இதோ. நல்ல லாபத்தை கொடுக்கும் விதத்தில் படம் உருவான பட்ஜெட் அப்படம் திருப்பிக் கொடுத்த வசூலின் அடிப்படையில் இந்த லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது

தனுஷ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் ராஜ் கிரண்?

தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் என்றும், இதன் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சீனியர் நடிகர்களான ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் இருவரையும் தனுஷ் நேரில் சந்தித்து கதை கூறி நடிக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ் கிரணை தனுஷ் இயக்கி படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் உபேந்திரா ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் காரணம் இதுதானா – அவரே சொன்ன தகவல்

தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு 'விக்ரம்' என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

ரத்தம் சொட்ட சொட்ட சதீஷின் ‘சட்டம் என் கையில்’ டீசர் இதோ

Sattam En Kayil - Official Teaser | காமெடி நடிகராக இருந்த சதீஷ்இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

”ஆள்வதற்கு அதிகாரம் தேவை நினைச்சோம், இங்க வாழ்றதக்கு அதிகாரம் தேவை” – நந்தன் ட்ரெய்லர் இதோ

Nandhan - Official Trailer | சசிகுமார் ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதி பெரியசாமி நடித்த இந்தப் படத்தில் மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கங்குவா படத்தில் புது ரிலீஸ் தேதி… இணையத்தில் வைரலாகும் தகவல்!

இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தின் ‘டெல்டா கல்யாணம்’ பாடல் இதோ!

Delta Kalyanam | சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து டெல்டா கல்யாணம் எனும் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘ஸ்டார்’ படத்தில் நடிக்காது ஏன்? நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்!

முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தது. படத்திற்காக ஹரிஷ் கல்யாணின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து எந்த காரணமும் தெரிவிக்காமல் ஹரிஷ் கல்யாண் ஏன் அவர் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இன்றி நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. படம் வெளியாகி இத்தனை மாதங்கள் கழித்து முதன் முறையாக ஹரிஷ் கல்யாண் ஏன் ஸ்டார் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூர்யா படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை

Suriya 44 Movie: நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படத்திற்கு ‘சிறை’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

OTT Movie Update: வாழை முதல் தங்கலான் வரை.. செப்டம்பரில் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள்!

OTT Update: செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த புதுப்படங்கள்,எந்தெந்த ”ஒடிடி”யில் தளங்களில் வெளியாகும், எப்போது வெளியாகும் என்பதைப் பற்றி முழு விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த லிஸ்டில் சமீபத்தில் வெளியான வாழை முதல் தங்கலான் வரை படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ பட ட்ரெய்லர்.!

Kadaisi Ulaga Por Trailer : ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது தன்னுடைய 3வது படத்தை இயக்கி ரிலீஸை நோக்கி நகர்த்தியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா தானே எழுதி இயக்கி நடித்துள்ள அடுத்த படத்திற்கு 'கடைசி உலகப் போர்' என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

  • CMDoss
  • Updated on: Sep 12, 2024
  • 15:05 pm