5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Siragadikka Aasai: நகை விஷயத்தில் வசமாக சிக்கிய மனோஜ்… தூள் பறக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்!

Siragadikka Aasai Update: விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஏமாற்றி வந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் டிவிஸ்ட் நிறைந்த காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது.

Siragadikka Aasai: நகை விஷயத்தில் வசமாக  சிக்கிய மனோஜ்… தூள் பறக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 11 Jul 2024 14:17 PM

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், குறைந்த விலைக்கு வீட்டு உபயோக பொருட்கள் விற்பதாக தெரிவிக்கப்பட்ட இடத்துக்கு முத்துவும் அவனது நண்பரும் செல்கின்றனர். சென்ற இடத்தில் திடீரென போலீஸ் வந்து அங்கு விற்பனை செய்பவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து செல்கின்றனர். அவர்களுடன் முத்துவும் அவருடைய நண்பரும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அனைவரையும் சிறையில் வைத்திருக்க இந்த பொருள்களை எல்லாம் டெலிவரி செய்தது மனோஜ் என சொல்லப்பட போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைக்கின்றனர். வந்த இடத்தில் அங்கு இருப்பவற்றில் என்னுடைய கடை பொருள்கள் எதுவும் இல்லை என மனோஜ் தெரிவிக்கிறார். நான் வீட்டில் எப்படியோ சமாளித்து ரூபாய் 4 லட்சம் ரெடி பண்ணி விட்டேன் என தெரிவிக்கிறார். இதனை எல்லாம் சிறையில் இருக்கும் முத்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் அவர் அனைவரும் முன்னிலையிலும் மனோஜின் முகத்திரையை கிழிக்கிறார்.

Also Read: Actor Vijay: வரிகளைப் பார்த்து பயந்து போன விஜய்.. என்ன பாட்டு தெரியுமா?

ரோகினியிடம் அன்னைக்கு மனோஜ் புத்திசாலியா இல்லையா என்பதை நீங்க தெரிஞ்சிப்பீங்க என சொன்னியே நல்லா தெரிஞ்சுகிட்டேன். ரூபாய் ஒரு லட்சம் சம்பாதிச்சதை சொன்னானே ஆனால் நான்கு லட்சம் விட்டதை சொன்னானா? என கேள்வி எழுப்புகிறார். பின்னர் அனைவரிடத்திலும் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட வீடியோவை போட்டு காட்டுகிறார். அனைவரும் அந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சடைவதோடு இந்த வார ப்ரமோ நிறைவடைகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக திகழ்ந்து வருகிறது.கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஏமாற்றி வந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் டிவிஸ்ட் நிறைந்த காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த வார சீரியலில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பதில் ஏமாற்றம் அடைந்த மனோஜ் அதற்கான பணத்தை ஈடு கட்டுவதற்காக வீட்டில் இருந்த மீனாவின் நகையை விஜயாவின் உதவியோடு எடுத்துச் சென்று அடகு வைக்காமல் விற்கிறார். அதற்கு பதிலாக கவரிங் நகைகளை மாற்றி வைத்து விடுகிறார். பாட்டியின் பிறந்தநாளுக்கு மீனா அணிந்து வரும் நகைகளை பார்த்தவுடன் ஸ்ருதியின் அம்மா அது கவரிங் நகைகள் என தெரிவிக்கிறார். பின்னர் மீனா அணிந்திருந்த நகைகளை கொண்டு முத்து அடகு வைக்க செல்லும் போது அது கவரிங் என தெரிய வந்ததையடுத்து வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது.

Also Read: Crime: 4 வருடத்தில் 1500 சவரன் கொள்ளை.. திருடிய நகையில் ரூ.4கோடிக்கு பிஸினஸ்.. அலறவைத்த ‘ராடுமேன்’ திருடன்!

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக மனோஜும் விஜயாவும் மீனாவின் வீட்டிலிருந்து நகை வந்தது. அதனால் அவளது வீட்டில் இருப்பவர்கள் கவரிங் நகையை மாற்றி வைத்திருக்கலாம் என குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் உண்மையை கண்டுபிடிக்க முத்துவும் மீனாவும் களமிறங்கும் நிலையில் தற்போது ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.