5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thangalaan: தங்கலான் படத்தில் இதை கவனிச்சிங்களா? – ஷாக்கான விக்ரம் ரசிகர்கள்!

Vikram in Thangalaan: ட்ரைலர் படம் இப்படித்தான் இருக்கப்போகிறது என்ற பிம்பத்தை உண்டாக்கி விட்டது. ஆனால் கதை சரியாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த பிம்பத்தை நிச்சயம் பா.ரஞ்சித் திரைக்கதை மூலம் உடைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 10 Jul 2024 20:11 PM

தங்கலான்: நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் 2023 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. தொடர்ந்து மூன்று முறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் ட்ரைலர் என்று வெளியாகி உள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: Thangalaan Trailer: மிரட்டும் விக்ரம்.. மிரள வைக்கும் மேக்கிங்.. தங்கலான் ட்ரைலர் இதோ!

கவனிக்கவைத்த ட்ரைலர் காட்சிகள்

படத்தின் டிரைலர் தொடங்கும்போது யுத்ததுக்காக காத்திருப்பது போன்ற காட்சி படம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தி விடுகிறது. இதனை தொடர்ந்து ஆங்கிலேயர் வந்து இங்கிருக்கும் பழங்குடியின மக்களை கோலார் தங்க வயலுக்கு சென்று சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்த அழைத்துச் செல்லும் காட்சிகள் பாலாவின் பரதேசி படம் போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.

மக்களை சுரண்டி அவர்களின் உழைப்பு எல்லாம் பெற்று தங்களது செல்வம் கொழிக்க ஆங்கிலேயர்கள் இருப்பது ஒரு புறம் என்றால், அதே மக்களை காப்பாற்ற கிளம்பும் ஒரு கூட்டம் மறுபுறம் இந்த இரண்டுக்கும் நடுவில் விக்ரம் இருக்கும் பழங்குடியின மக்களின் நிலை, அவர்கள் யார் பக்கம் என ஒரு நாவலை புரட்டுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் படத்தில் காட்டப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் தனியாக தெரிவது ஒரு மைனஸ் ஆக உள்ளது. ஸ்பார்டன்ஸ் உள்ளிட்ட சில ஆங்கில படங்களின் கலர் டோன்களை உபயோகத்து இருக்கிறார்கள். இது எந்த அளவில் பெரிய திரையில் மின்னும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

அயராத உழைப்பு

இந்த படத்துக்காக விக்ரம் உயிரை கொடுத்து நடித்துள்ளார் என்பது ட்ரைலர் காட்சிகளை பார்க்கும் போது நன்றாக புரிகிறது. நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் நடிப்பே வராது என ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட மாளவிகா மோகனனுக்கு மிக முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது. ட்ரைலர் படம் இப்படித்தான் இருக்கப்போகிறது என்ற பிம்பத்தை உண்டாக்கி விட்டது. ஆனால் கதை சரியாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த பிம்பத்தை நிச்சயம் பா.ரஞ்சித் திரைக்கதை மூலம் உடைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் 2 படமும், பா. ரஞ்சித் கடைசியாக இயக்கிய நட்ச்சத்திர நகர்கிறது படமும் சரியாக செல்லவில்லை. அதனால் இருவரும் தங்கலான் படம் நிச்சயம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்தது காத்திருக்கின்றனர்.