5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thangalaan Trailer: மிரட்டும் விக்ரம்.. மிரள வைக்கும் மேக்கிங்.. தங்கலான் ட்ரைலர் இதோ!

தங்கலான் படம் விக்ரமின் 61வது படமாகும். இந்த படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு என எதிர்பார்க்கப்படுகிறது. 3 முறை ரீலிஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டநிலையில் இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என  கூறப்படுகிறது. தங்கலான் விக்ரமுக்கு மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுத்தரும் என பலரும் கணித்துள்ளனர்.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 10 Jul 2024 18:24 PM

தங்கலான் ட்ரைலர்: தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘சீயான்’ விக்ரமின் தங்கலான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.தங்கலான் படத்தில் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2021 ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு நிறைவுப் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோலார் தங்க சுரங்க பகுதியில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 3 முறை ரீலிஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டநிலையில் இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என  கூறப்படுகிறது.

Latest Stories