5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

UK Election 2024 : ‘பிரிட்டன் அதிபர் தேர்தலில் திமுக திட்டங்கள்’ – அரசு குறிப்பிட்ட தகவல்கள்!

Britain President Election | பிரிட்டன் அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சி திமுக அரசின் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம், நான் முதல் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டங்களை தொழிலாளர் கட்சி முன்மாதிரியாக எடுத்து செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

UK Election 2024 : ‘பிரிட்டன் அதிபர் தேர்தலில் திமுக திட்டங்கள்’ – அரசு குறிப்பிட்ட தகவல்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Jul 2024 11:16 AM

பிரிட்டன் அதிபர் தேர்தல் : பிரிட்டனில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டனின் முன்னாள் அதிபர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியை தழுவிய நிலையில், தொழிலாளர் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரிட்டனின் அடுத்த அதிபராக கெய்ர் ஸ்டார்மர் பதவி ஏற்கிறார். இது குறித்து மக்களிடம் பேசிய ஸ்டார்மர், “மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது ஏனென்றால் இதுதான் ஜனநாயகம் மற்றும் உங்கள் எதிர்காலம் என தெரிவித்தார். நீங்கள் எங்களுக்காக வாக்களித்துள்ளீர்கள், நாங்களை அதற்கு திருப்பி செய்யும் நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார்.

திமுக ஆட்சியை பின்பற்றிய பிரிட்டன் தொழிலாளர் கட்சி?

இந்நிலையில் திமுக ஆட்சியை பின்பற்றி பிரிட்டனில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழ்நாடு மக்களிடம் மட்டுமன்றி இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

இதையும் படிங்க : Armstrong Murder : நண்பன் ஆம்ஸ்ட்ராங் கொலை.. மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்!

திமுக அரசு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட தொழிலாளர் கட்சி

அத்திட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவ- மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

இதையும் படிங்க : CM Stalin: ஆம்ஸ்ட்ராங் படுகொலை… காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு!

இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உள்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும் கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4% என்ஜினீயரிங் மாணவர்களும், 83.8% கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர் என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News