5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காசாவில் தொடரும் வான்வழி தாக்குதல்.. பள்ளி மீது வீசப்பட்ட குண்டு.. அப்பாவி குழந்தைகள் பலி!

காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டனர். காசாவின் மத்திய பகுதியில் உள்ள அல்-சர்தி பள்ளியை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.பிரிவு நடத்தி வருகிறது. அந்த பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், நேற்று அதிகாலை பள்ளியைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் தொடரும் வான்வழி  தாக்குதல்.. பள்ளி மீது வீசப்பட்ட குண்டு.. அப்பாவி குழந்தைகள் பலி!
இஸ்ரேல் தாக்குதல்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jun 2024 09:30 AM

காசாவில் தொடரும் வான்வழி தாக்குதல்: இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.  தங்கள் நாட்டுக்குள் நுழைந்து அக்டோபர் 7ஆம் தேதி சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் படையினரை ஒழித்துகட்டுவதற்காக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் கடைசி நம்பிக்கையாக இருந்த ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டனர். காசாவின் மத்திய பகுதியில் உள்ள அல்-சர்தி பள்ளியை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.பிரிவு நடத்தி வருகிறது. அந்த பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், நேற்று அதிகாலை பள்ளியைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

Also Read: ஆபாச நடிகைக்கு பணம்.. சிக்கிய டிரம்ப்.. நியூயார்க் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அப்பாவி குழந்தைகள் பலி:

இஸ்ரேல் படையினர் வீசிய ஏவுகணைகள் இரண்டு மற்றும் மூன்றாம் தளத்தில் உள்ள வகுப்பறைகளைத் தாக்கி சேதப்படுத்தியது. மேலும், இந்த தாக்குதலில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பள்ளி வளாகத்தில் இருந்தபடி ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வந்ததால் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 12,000 பேர் உயிரிழந்தனர்.

அங்கிருந்து சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து சென்றனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து, பிணைக் கைதிகளை விடுவிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது. சமீபத்தில் கூட, இஸ்ரேல் தனது போரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி, “2024ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும். அனைத்து ஹமாஸ் அமைப்பையும் அழிக்கும் வரை போர் நிறுத்தம் முடிவுக்கு வராது” என்றார்.

Also Read: ரஃபாவில் தொடரும் அழுகுரல்.. 7 மாதங்களுக்கு நீடிக்கயிருக்கும் போர்!

Latest News