5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆபாச நடிகைக்கு பணம்.. சிக்கிய டிரம்ப்.. நியூயார்க் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Donald Trump: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என நியூயார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் குற்றவியல் தண்டனை பெற்ற முதல் முன்னாள் அதிபர் டிரம்ப என மோசமான வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுளில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாச நடிகைக்கு பணம்.. சிக்கிய டிரம்ப்.. நியூயார்க் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
டிரம்ப்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 May 2024 08:43 AM

டிரம்ப் குற்றவாளி: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என நியூயார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் உடன் பாலுறவு கொண்டதாக  ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியில்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக, இதுகுறித்து வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியிருந்ததார். 1,30,000 டாலர்கள் (ரூ.1 கோடி) பணத்தை டிரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் கொடுத்தாக கூறினார். இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது மொத்தம் 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த 34 குற்றச்சாட்டுகளில் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கு அவருக்கு தலா நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, அப்போது டிரம்ப் அங்கு அமர்ந்திருந்தார். இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மிகவும் அப்பாவி மனிதன். தொடர்ந்து போராடுவேன். நவம்பர் 5ஆம் தேதி மக்கள் எனக்க உண்மையான தீர்ப்பை தருவார்கள்” என்றார். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேற்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ரஃபாவில் கொத்து கொத்தமாக கொல்லப்படும் குழந்தைகள்.. விழிக்குமா உலக நாடுகள்.. வைரலாகும் பதிவு!

அமெரிக்க அதிபர் தேர்தல்:

டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. டொனால்ட் டிரம்ப் தனது சொந்த நலனுக்காக சட்டத்தை மீறுவதால் விளைவுகளை சந்திக்க மாட்டார் என் நம்புகிறார். ஜனநாயகத்திற்கு டிரம்ப் அச்சுறுத்தலாக இருக்கிறார்” என்றார். உலக வல்லரசான அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இவரது பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைய இருக்கிறது. இதனை அடுத்து, நவம்பர் 5ஆம் தேதி அதிபர் நடைபெறும் சூழலில், டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிரம்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையில்லை. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் சிறையில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

Also Read: ரஃபாவில் தொடரும் அழுகுரல்.. 7 மாதங்களுக்கு நீடிக்கயிருக்கும் போர்!

Latest News