5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

யோகி பாபுவின் ‘சட்னி – சாம்பார்’ டீசர் இதோ!

#HotstarSpecials| Chutney Sambar | இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த சீரிஸின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2024 11:59 AM

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘சட்னி சாம்பார்’இணையத் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ரஜினி, ஷாருக்கான், தனுஷ், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி வேடத்திலும், சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘பொம்மை’ படம், ஜூன்16-ல் வெளியானது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சட்னி சாம்பார்’ என்ற படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த சீரிஸின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Latest Stories