GOAT Shots: விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சப்ரைஸ்.. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட கோட் படக்குழு!
Vijay Birthday: விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், கோட் படத்தின் படக்குழு க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜய்யும் வயதான விஜய்யும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, கோட் படத்தின் இரண்டாவது பாடலான ’சின்ன சின்ன கண்கள்' பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் , இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தற்போது கூட்டணி அமைத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ ஏற்கனவே வெளியானது. இதனைத் தொடர்ந்து, கோட் படத்தின் இரண்டாவது பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை ஒட்டி இந்த பாடல் வெளியானது. இந்த நிலையில், அடுத்த சப்ரைஸாக கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜய்யும் வயதான விஜய்யும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.