யோகி பாபுவின் `போட்’ திரைப்படத்தின் டீசர் இதோ!
Boat - Announcement Teaser | கடந்த 2006ம் ஆண்டு, பிரபல நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்கின்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் போட் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சிம்புதேவன். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள `போட்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டு மக்களின் பேவரைட் காமெடி நடிகனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வலம் வந்த யோகி பாபு, அதன் பின் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு தற்போது நடித்துள்ள படம் போட். பிரபல இயக்குனர் சேரன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த நபர் தான் சிம்புதேவன். கடந்த 2006ம் ஆண்டு, பிரபல நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்கின்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் போட் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சிம்புதேவன். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.