5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vikravandi By Election: விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பரப்புரை.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Vikravandi By Election: விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பரப்புரை.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jul 2024 18:21 PM

பரப்புரை நிறைவு: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை இ இன்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, தொகுதியில் தேர்தல் பணியாற்ற வந்திருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், எம்.பி. எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி, சவுமியா அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Also Read: அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. எச்சரிக்கும் தமிழக அரசு!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு:

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.  இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக உள்ள சி.அன்புமணி,  நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்பட மொத்தம் 29  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

276 வாக்குச்சாவடிகள்:

நாளை மறுதினம் 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான, மிக பதற்றமானன 44 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்தி துணை ராணுவம் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்பி தீபக்சிவாச் தலைமையில் துணை ராணுவம் உள்ளிட்ட 12,000 போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரமாக, அதிக வாக்குகள் வத்தியாசத்தில் வென்று தொகுதி தக்க வைக்க திமுகவும், அதைத் தட்டிப் பறிக்க பாமகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணித்துள்ள நிலையில், அக்கட்சியினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. தொழிலாளி உயிரிழப்பு.. தேனியில் சோகம்!

Latest News