5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Brain Eating Amoebae: அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. எச்சரிக்கும் தமிழக அரசு!

மூளையை தின்னும் அமீபா: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

Brain Eating Amoebae: அச்சுறுத்தும் மூளையை தின்னும் அமீபா.. எச்சரிக்கும் தமிழக அரசு!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Jul 2024 15:12 PM

தமிழக அரசு அறிவுறுத்தல்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனும் மூளையை திண்ணும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேளரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள், வலிப்பு போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: சாலையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. அள்ளிச்சென்ற பொதுமக்கள்..!

கேரளாவை அச்சுறுத்தும் தொற்று:

கேரளாவில் கடந்த மாதங்களில் மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிருதுல், குளத்தில் குளித்த பிறகு அவருக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முதலில் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும் அவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேபோல கண்ணூரை சேர்ந்த 13 வயதான தாக்‌ஷினா, மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி உயிரிழந்தார். தாக்‌ஷினா மூணாறுக்கு சுற்றுலா சென்று, அங்கு நீச்சல் குளித்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா கடந்த மே 1 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் உறவினர்களுடன் குளித்துள்ளார். இதனால் மே 10 ஆம் தேதி அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அறிகுறிகள் என்ன?

  • தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை மூளையை தின்னும் அமீபா தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.
  • இந்த அமீபா நமது உடலில் வளர தொடங்கும் போது கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
  • இந்த வகை அமீபாக்கள் வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறிகள் ஏற்பட்ட 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர்.
  • இந்த நோய் உயிரிழந்த பிறகு தான் அந்த நபர் இந்த பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என்பதை கண்டறிய முடியும்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு கொட்ட போகுது மழை… வானிலை மையம் அலர்ட்!

Latest News