5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னையில் அடுத்த பிரம்மாண்டம்.. சூப்பராக வரப்போகும் பிராட்வே பஸ் நிலையம்!

புதிதாக கட்டப்பட உள்ள பிராட்வே புதிய பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்று மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 4 மாடல்கள இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், ஒன்று தேர்வாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று, பிராட்வேயில் உள்ள குறலகமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளன.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 May 2024 09:47 AM
சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வருகிறது. தொகத்தில் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002க்கு பிறகு போக்குவரத்து நெரிசல் என பல காரணங்களால் வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

1 / 6
பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலான மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.  இங்கு நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே இருந்து இருந்து வருகிறது.  இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை  நவீன முறையில் மேம்படுத்த ரூ. 823 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

2 / 6
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்று மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 4 மாடல்கள இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், ஒன்று தேர்வாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இதேபோன்று, பிராட்வேயில் உள்ள குறலகமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளன.

3 / 6
பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமும், அதில் முதல் இரண்டு தளங்களில் மாநகரப் பேருந்துகள் நிறுத்தம், உணவகங்கள், கழிவறை வசதிகள் அமைக்கப்பட இருக்கிறது. மற்ற தளங்கள் வணிக வளாகங்களாக செயல்படும்.

4 / 6
அதேபோல குறலகத்தை இடித்துவிட்டு, வணிக வளாகம் கட்டப்பட உள்ளன. அதன் அடித்தளத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நவீன பார்க்கிங் வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், பயணிகள் வசதிக்காக அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர், மின்சார ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை மற்றும நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

5 / 6
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இதற்கான டெண்டர் விடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் தான், புதிய பேருந்து எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

6 / 6
Follow Us
Latest Stories