5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சாலையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. அள்ளிச்சென்ற பொதுமக்கள்..!

உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் சென்ற வாகனத்தில் இருந்து இந்த 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையில் விழுந்ததாகக் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அப்பகுதி வழியாக சென்ற எந்த வாகனத்தில் இருந்து விழுந்தது என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. சாலை முழுவதும் சுமார் 100 மீட்டர் தொலைவு வரை 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொது மக்கள் உடனடியாக அந்த 500 ரூபாய் நோட்டுகளை அள்ளத்தொடங்கினர்.

சாலையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. அள்ளிச்சென்ற பொதுமக்கள்..!
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 08 Jul 2024 12:29 PM

சாலையில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்: மதுரை ஊசிலம்பட்டி தேனி ரோட்டில் சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் இருந்த அந்த ரூ.500 நோட்டுகளை அள்ளி சென்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் சென்ற வாகனத்தில் இருந்து இந்த 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையில் விழுந்ததாகக் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அப்பகுதி வழியாக சென்ற எந்த வாகனத்தில் இருந்து விழுந்தது என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

சாலை முழுவதும் சுமார் 100 மீட்டர் தொலைவு வரை 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொது மக்கள் உடனடியாக அந்த 500 ரூபாய் நோட்டுகளை அள்ளத்தொடங்கினர். இதனை கண்ட மேலும் சிலர் 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றனர். திடீரென அப்பகுதியில் அதிகப்படியான மக்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 Also Read: வட்டி மட்டும் ரூ.80,000.. அசத்தல் அம்சங்களுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் அங்குச் சிதறிக் கிடந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், எந்த வாகனத்தில் இருந்து இந்த நோட்டுகள் விழுந்தது, இதனை திட்டமிட்டு யாராவது செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி ஏரி சாலையில் இருசக்கரத்தின் பின்னால் அமர்ந்து சென்ற வயதான முதியவர் பையில் இருந்த 2 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் சாலை முழுவதும் சிதறியது. இதை பார்த்த வாகன ஒட்டிகள் சிலர் வேகமாக சென்ற அவரை புதிய பஸ் நிலையம் அருகே மடக்கி பிடித்து அழைத்து வந்தனர். இந்நிலையில் சிதறி கடந்த 500 ரூபாய் நோட்டுக்களை வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை பகுதி சேர்ந்த பொதுமக்களும் பொறுக்கி எடுத்து மீட்டு இராமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி நாயக்கர் என்ற முதியோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

முதியவரை விசாரித்த போது ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள வங்கியில் பணத்தை செலுத்துவதற்கு வந்ததாகவும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டு வந்தபோது பையை பக்கவாட்டில் மாட்டியிருந்த நிலையில் சைலன்சர் வெப்பத்தில் பை ஓட்டையாகி அதில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் பணமும் சாலையில் கொட்டியதாக தெரிவித்தார்.

பணம் கொட்டிய விஷயமே தனக்குத் தெரியாத நிலையில் தன்னை பின் தொடர்ந்து வந்த நபர்கள் விவரம் கூறி அழைத்து வந்ததால் பரிபோன பணம் முழுவதும் தமக்கு மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Also Read: சென்னையில் யூடியூபர்களை மிரட்டிய இளைஞர்கள்.. ரிச்சி தெருவில் நடந்த பரபரப்பான சம்பவம்..

 

Latest News