5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ.500.. 28 வருடங்களுக்கு பிறகு புகார்தாரரிடம் ஒப்படைப்பு.. கோவையில் விநோதம்!

கோவையில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கடந்த 1996ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய், 28 ஆண்டுகளுக்கு பின் புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை வடவள்ளியில் மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்த கதிர்மதியோன் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது கதிர்மதியோன் கொடுத்த ரூ.500 தடயங்களாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது.

லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ.500.. 28 வருடங்களுக்கு பிறகு புகார்தாரரிடம் ஒப்படைப்பு.. கோவையில் விநோதம்!
கதிர்மதியோன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2024 11:40 AM

28 வருடங்களுக்கு கிடைத்த ரூ.500: கோவையில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கடந்த 1996ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 400 ரூபாய், 28 ஆண்டுகளுக்கு பின் புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். அப்போது, ரூ.500 லஞ்சமாக தர வேண்டும் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால், கார்த்திகேயன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதனை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதிர்மதியோனிடம் இருந்த 500 ரூபாயை பெற்றுக் கெண்டு, ரூபாய் நோட்டுகளில் ரசாயணம் தடவி லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

Also Read: பானி பூரி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு? திண்டுக்கல் ஷாக்!

கோவையில் விநோதம்:

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அந்த அதிகாரியை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த வழக்கில் கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் நீதிமன்றத்தில் சாட்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2001ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருந்தாலும், கதிர்மதியோனின் ரூ.500 பணம் அவருக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக லஞ்சமாக கொடுக்கப்பட்ட 500 ரூபாயை திருப்பி தருமாறு 2007ல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்தது. இறுதியாக கதிர்மதியோனை நீதிமன்றத்தில் ஆஜராகி 400 ரூபாயை பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான கதிர்மதியோனிடம் ரூ.500 ஒப்படைக்கப்பட்டது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.500 அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு லஞ்சமாக கொடுத்த பணம் திரும்பக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புகார்தாரருக்கு தண்டனை போல உள்ளதால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் பெறப்படும் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கதிர்மதியோன் கூறுகிறார்.

Also Read: சென்னையில் இன்று மின்தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Latest News