5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Power Cut: சென்னையில் இன்று மின்தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழில் நகர், ஐஐடி, வேளச்சேரி, கே.கே.நகர், திருவொற்றியூர், கொட்டிவாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதியில்  மின்விநியோகம் மதியம் 2.00 மணி வரை துண்டிக்கப்படுகிறது.

Chennai Power Cut: சென்னையில் இன்று மின்தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
சென்னையில் இன்று மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Jun 2024 08:39 AM

மின் விநியோகம் நிறுத்தம்: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (11.06.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை எழில் நகர், ஐஐடி, வேளச்சேரி, கே.கே.நகர், திருவொற்றியூர், கொட்டிவாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதியில் சிஎம்ஆர் திட்ட பணிக்காக 110 கி.வோ உயர்  அழுத்த மின்பாதை மற்றும் வழி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்கள்?

எந்த பகுதிகள்?

இந்த பணிகளின் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் காலை 9 மணிக்கு துண்டிக்கப்படுகிறது.  அதன்படி,  எழில் நகர், ஐஐடி, வேளச்சேரி, கே.கே.நகர், திருவொற்றியூர், கொட்டிவாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதியில்  மின்விநியோகம் மதியம் 2.00 மணி வரை துண்டிக்கப்படுகிறது. வேளச்சேரி (விஜய நகர்) பகுதியில் சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்தாராம் நகர், டிஏஎன்கிளேவ் அபார்ட்மெண்ட், விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.  எழில் நகர் பகுதியான கற்பக விநாயகர் 1வது மெயின் ரோடு, கற்பக விநாயகர் 6வது தெரு முதல் 35வது தெரு, சௌந்தர்யா கார்டன் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

டிஎச் சாலையில் கும்மாளம்மன் கோயில் தெரு, GARoad, THRoad 1வது பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, VP கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜ தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்பராயன் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை 1வது பகுதி, இளையா தெரு. மன்னப்பன் தெரு 1வது பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

ஐஐடியில் ஸ்ரீ ராம் நகர், பள்ளிப்பாபட்டு மெயின் ரோடு, எத்திராஜ் தெரு, யோகி கார்டன், கந்தசாமி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. கொட்டிவாக்கத்தில் (கே.கே. சாலை) சாஸ்திரி நகர் பிரிவு, 2வது சீவார்டு சாலை, 3வது கடல் வார்டு சாலை, 4வது கடல் வார்டு சாலை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே.ரோடு, ராஜா ரங்கசாமி அவென்யூ ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Also Read: களத்தில் விஜய்.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் த.வெ.க தலைவர்!

Latest News