5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs PAK, Weather Update: இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி.. பிட்ச் நிலவரம் என்ன?

India vs Pakistan T20 World Cup match pitch report : டி20 உலக கோப்பை போட்டி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஆடுகளத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டி நடைபெறும் மைதானம் குறித்து வீரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

IND vs PAK, Weather Update: இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி.. பிட்ச் நிலவரம் என்ன?
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 09 Jun 2024 15:19 PM

அமெரிக்காவின் நியூயார்க் எய்சன்ஹவர் பார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி இன்று 2-வது போட்டியில் மோதவுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, இந்த போட்டியில் தோல்வியை தழுவினால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமல், லீக் சுற்றுடன் வெளியேறும். மேலும் இந்தியா இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: IND vs PAK: T20 உலக கோப்பை போட்டி.. இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

இரு அணிகளிலும், இடம் பெறும் உத்தேச வீரர்களின் பட்டியல்:

ரோகித் சர்மா (கேப்டன்), கோலி, ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், சகால், குல்தீப், ஜெய்ஸ்வால்

பாபர் ஆசம் (கேப்டன்), ஆசம் கான், பகர் ஜமான், இப்திகார், ரிஸ்வான், சயிம் அயுப், உஸ்மான் கான், இமாத் வாசிம், ஷதாப் கான், அப்பாஸ் அப்ரிதி, அப்ரார் அகமது, நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி

Also Read: JEE Exam Results: வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?

நியூயார்க் எய்சன்ஹவர் பார்க் மைதானத்தில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் அதிகபட்சமாக  106 ரன்கள்தான் அடிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங்கில் தடுமாறின. நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி போட்டியில் இந்தியா இந்த மைதானத்தில் விளையாடும் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலக கோப்பை தொடருக்காக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த ஆடுகளம் தயாரிக்கப்பட்டு வெறும் ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. எனவே நிறைய குழப்பங்களுடன், எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. நாங்கள் பேட் செய்த பொழுதும் இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறவில்லை என்று கூறினார். மேலும் இந்த மைதானத்தில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு எல்லாம் விளையாட முடியாது. சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாக கூறினார். பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த ஆட்டத்திலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆடுகளத்தை எவ்வாறு இரு அணிகளும் தங்களுக்கு ஆயுதமாகப் பயன்படுத்தப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest News