5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs PAK: T20 உலக கோப்பை போட்டி.. இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

T20 World Cup 2024 Live Streaming: டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளிவந்த போதுலிருந்து, கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இந்த போட்டியில் வெற்றி பெறும் இலக்குடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

IND vs PAK: T20 உலக கோப்பை போட்டி.. இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
இந்தியா – பாகிஸ்தான்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 09 Jun 2024 15:07 PM

அமெரிக்காவின் நியூயார்க் எய்சன்ஹவர் பார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி இன்று 2-வது போட்டியில் மோதவுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, இந்த போட்டியில் தோல்வியை தழுவினால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமல், லீக் சுற்றுடன் வெளியேறும். மேலும் இந்தியா இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த மாதம் வரையிலும், ஐபிஎல் டி20 போட்டியில் விளையாடியுள்ள அனுபவத்தை பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றனர்.

Also Read: மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்பா? தேசிய அரசியலில் பரபரப்பு!

முதல் போட்டியில், கேப்டன் ரோஹித்தும், ரிஷப் பந்த்தும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். இன்றைய போட்டியிலும் இருவரும் ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களான ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்,   அக்சர் படேல் ஆகியோர் பலம் வாய்ந்து தருகின்றனர்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம், ஷதாப் அகமது, இப்திகார் அகமது ஷாகின் ஷா அப்ரிடி ஆகியோர் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர். அதேபோல் பவுலிங்கில் முகமது அமிர், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு பலமாக உள்ளனர்.

Also Read: Post Office scheme: ரூ.5 லட்சம் முதலீடு, ரூ.10 லட்சம் ரிட்டன்!

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இந்தியாவில் எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில், அதே எதிர்ப்பார்ப்பை அமெரிக்காவிலும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 34,000 பேர் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்ட மைதானத்தில், ஒரு டிக்கெட் விலை இந்திய ரூபாயில் 2.08 முதல் ரூ. 8.4 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரு அணி வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெறும் இலக்குடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ஸ் தொலைக்காட்சியிலும், உங்களது மொபைலில் பார்க்க டிஸ்னி + ஹார்ட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.

Latest News