தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கோடை வெயிலை தாக்கத்தை தணிக்க மக்கள் அனைவரும் மலைப்பிரதேசங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமில்லாது கேரளாவில் உள்ள மூணார் போன்ற சுற்றுலா தளங்களை ஏராளமானப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பெற்றோர்களும் குழந்தைகளுடன் குடும்பமாக சென்று மலையருவிகளில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி, இந்தியாவின் சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஊட்டி அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும்
வார விடுமுறை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகவும் ஒரு மலைவாழ் இடத்தை சுற்றிப்பார்க்கவும் ஏதுவாக மலைப்பிரதேசங்கள் அமைந்துள்ளது.
அடர்ந்த வனப்பகுதிகள் அச்சமூட்டும் கொண்ட ஊசி வளைவுகளில் மலையேறும் போது பசுமையான மலைச்சாரல் மனதிற்கு அமைதியை தருகிறது.
வனவிலங்குகளின் ஊடுபாதையில் வளைவில் அச்சமிகுந்த பயணத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கு தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன
வார விடுமுறை நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் மலைவாசஸ்தலங்களில் மலையேற்றத்தில் ஈடுபடும் சுற்றுலா விரும்பிகளை அதிக அளவில் பார்க்க முடியும்