கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட மதுமிதா, சினிமா நடிகர்களுக்கு சமமாக தமிழ் சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோயினாக உள்ள மதுமிதா முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். அங்கு அவருக்கு போதிய வரவேற்பு இல்லாததால் தமிழில் களமிறங்கினார்.
ஜீ தமிழில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தெரியாத வரம் வேண்டும் சீரியலில் துர்கா என்கிற கதாபாத்திரம் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் கால் பதித்தார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா, கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
எதிர்நீச்சல் ஜனனி என்றால், இன்றைய சீரியல் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஹீரோயினாக உள்ளார். கதையின் நாயகியாக அமைதியான குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தமிழக மக்களிடம் நல்ல எதிர்நீச்சல் சீரியல் மூலம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள மதுமிதா சமூக வலைத்தளங்களில் எப்போதும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.