பாலிவுட் நடிகையான நடிகை அனன்யா பாண்டே, நடிகர் சங்கி பாண்டேயின் மகள், இந்தி படங்களில் திரையுலகில் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தில் தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடிகை அனன்யா பாண்டே அறிமுகமானார்.
அக்டோபர் மாதம் 30 தேதி பிறந்த இவர், பாலிவுட் உலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருகிறார். 2019 ஆம் ஆண்டு டீன் படமான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் நகைச்சுவைப் படமான பதி பட்னி அவுர் வோ திரைப்படத்தில் அறிமுகமானர்.
நடித்த அனன்யா பாண்டே நடித்த லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. பான் இந்தியா படமாக உருவான லைகர் திரைப்படம் தமிழ் மொழியிலும் வெளிவந்த நிலையில், லைகர் படம் படுதோல்வி அடைந்ததால் அடுத்து தென்னிந்திய படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை.
அனன்யா பாண்டேவின் ‘கெஹ்ரையான்' படமும் தோல்வியை சந்தித்தது. இப்போது ஆயுஷ்மான் குரானாவுடன் ‘ட்ரீம் கேர்ள் 2’என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.
அனன்யா தனது தோல்வி பற்றி கூறுகையில், அது பற்றி வருத்தமில்லை. ஒவ்வொரு படங்களில் இருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
திரைப்படங்களில் தோல்வி என்பது, இது ஒரு பயணம். முடிவல்ல. தோல்வி பற்றி அதிகம் சிந்திக்காமல், கற்ற பாடத்தை அடுத்தப் படங்களில் எப்படி செயல்படுத்த முடியும் என்று மட்டுமே யோசிக்கிறேன் என்று கூறினார்.
அனன்யா பாண்டேவின் காதலர் பற்றிய கேள்விக்கு “நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது நல்லதுதான். அவர்கள் யூகித்துக் கொண்டே இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அனன்யா பாண்டேவிற்கு யாருடன் நடிக்க விருப்பம் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிலையில், "நடிகர் விஜய்யுடன் நடிக்க விருப்பம்" என கூறியுள்ளார்.