தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதே இல்லை என்று கூறுவார்கள். இதில் பல உண்மைகள் உள்ளன. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என ஏகப்பட்ட சத்துக்கள் உடள்ளன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிறு பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. உடல் தசைகள், எலும்புகள் வலி வராமல் ஆப்பிள் தடுக்கும்.
வெறும் வயிற்றில் ஆப்பிளைச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துகள் சேர்ந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். கலோரிகள் இதில் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாரலமாக இதை சாப்பிடலாம்.
இப்படி பல நன்மைகளை தரும் ஆப்பிளை ஜூஸாக குடிக்காமல், பழமாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அதேபோன்று, தோல் உரிக்காமல் அப்படியே முழுமையாக தினசரி சாப்பிடலாம்.