5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chutney Recipes : கேரட்டுல சட்னியா? வாங்க ஈசியா செய்யலாம் மூன்று சட்னி.

Recipes of three chutneys : கேரட், நெல்லி மற்றும் மாங்காய் சட்னி செய்முறை.

intern
Tamil TV9 | Updated On: 13 May 2024 16:35 PM
1.மாங்காய் சட்னி  தேவையான பொருட்கள்:  மாங்காய் - 2 (சிறிய அளவு) நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு வறுத்த சீரகம் - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  செய்முறை:  நறுக்கிய மாங்காய், நாட்டுச் சக்கரை, வறுத்த சீரகம், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு மிக்சரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். உப்பு மற்றும் சர்க்கரையை சரிபார்த்து சேர்த்துக்கொள்ளவும்.   அதை அப்படியே பாத்திரத்தில் மாற்றி பிரிட்ஜில் சேமித்துக்கொள்ளவும். வேண்டிய நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 / 3
2. நெல்லிக்காய் சட்னி   தேவையான பொருட்கள் :  பெரிய நெல்லிக்காய் - 6 முதல் 8 பச்சைமிளகாய் - 2 துருவிய தேங்காய் - 1/4 கப் இஞ்சி - சிறிய துண்டு கறிவேப்பிலை - ஒரு கொத்து  கடுகு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு  செய்முறை :  ஒரு மிக்சர் ஜாரில் விதை நீக்கப்பட்டு நறுக்கிய நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.   தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.  அரைத்த விழுதில் எண்ணெய், கடுகு கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி சூடாக தோசை அல்லது சாதத்துடன் பறிமாறவும்.

2 / 3
3. கேரட் இஞ்சி சட்னி  தேவையான பொருட்கள்:  கேரட் - 2 இஞ்சி - சிறிய துண்டு பச்சைமிளகாய் - 3 கறிவேப்பிலை - 1 கொத்து வறுத்த கடலை - 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் - 1 லெமன் உப்பு - தேவையான அளவு  செய்முறை :  ஒரு மிக்சர் ஜாரில் துருவிய கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வறுத்த கடலை, லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.   தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.  பிறகு அதை பரோட்டா, சப்பாத்தி, தோசை அல்லது சாதத்துடன் பறிமாறவும்.

3 / 3
Follow Us
Latest Stories