2. மஞ்சள்தூள்: சுத்தமான மஞ்சள்தூள் மிகவும் ஆரோக்கியமானது. பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஆனால் அதிலும் கலப்படம் செய்கிறார்கள். சாக்பீஸ் தூள், மெத்தனில் மஞ்சள், லெட் குரோமேட் போன்றவற்றை சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை போட்டுப் பாருங்கள், அது உடனடியாக அதாவது 10 நிமிடங்களில் அடியில் சென்று படிந்து தண்ணீர் சுத்தமானதாக இருந்தால், அது கலப்படமற்ற மஞ்சள்தூளாக எடுத்துக்கொள்ளலாம்.