5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கழுத்து வலியை தடுக்கும் முறைகள் இதோ..!

Neck pain: இன்றைய நவீன உலகில் தினசரி மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று கழுத்து வலி. கழுத்து வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. எனவே கழுத்து வலி வராமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

intern
Tamil TV9 | Updated On: 13 May 2024 16:42 PM
கழுத்து வலி வராமல் இருக்க எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள். கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1 / 7
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

2 / 7
பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்த வரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்து கொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.

3 / 7
கம்ப்யூட்டரில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்க வேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி ஏற்படும். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கக் கூடாது அப்போது எழுந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.

4 / 7
கழுத்து வலி வராமல் இருக்க தலையை குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணமாக தையல் வேலை செய்கிறவர்கள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று எழுந்து நடக்க வேண்டும்.

5 / 7
கழுத்து வலி வராமல் இருக்க  படிக்கும்போது படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. புத்தகத்தை குனிந்தவாறு வாசித்துக் கொண்டே இருக்கக் கூடாது. நேராக உட்கார்ந்து படிக்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

6 / 7
கழுத்து வலி வராமல் இருக்க மிருதுவான தலையணையை பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.

7 / 7
Follow Us
Latest Stories