சிலர் நாய்களைப் பார்த்தாலே தெறித்து ஓடுவார்கள். சிலரோ நாய்கள் என்றாலே கசிந்து உருகுவார்கள். எங்கு நாயைப் பார்த்தாலும் ஒரு ரொட்டித்துண்டு பாக்கெட்டை உடைத்துப் போட்டுவிட்டு அருகிலிருந்து தலையைக் கோதுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? எப்படி இவர்கள் எளிதில் வெளியிலுள்ள எல்லா நாய்களுடனும் சகஜமாகப் பழகுகிறார்கள் என்று யோசித்திருப்போம். ஆம் நன்கு கவனித்துப் பாருங்கள் அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் தங்கள் வீட்டிலும் நாய்களை வளர்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் நாய்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள். தங்கள் நாயை மிஸ் பண்ணுபவர்களாக இருப்பார்கள். சிலருக்கு நாய் என்று சொன்னால்கூட பிடிக்காது. அவ்வளவு செல்லப்பிராணியாக வைத்திருப்பார்கள். இப்படியொரு பிணைப்பைக் கொண்டாடும் விதமாகத்தான் இந்த பிணைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியான நாளை இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பிணைப்பு நாளை உங்கள் செல்லப்பிராணி நண்பரோடு எப்படி கொண்டாடலாம் என ஒரு சின்ன டிப்ஸ் சொல்கிறோம் கேளுங்கள்.