5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Summer foods : கொளுத்தும் சம்மருக்கு ஏற்ற 5 உணவுகள்.

Ayurveda suggestion : ஆயுர்வேதம் சொன்ன 5 சிறப்பான கோடைக்காலத்து உணவுகள்.

intern
Tamil TV9 | Published: 14 May 2024 19:02 PM
சம்மர் வந்துட்டா போதும் இதை சாப்பிடலாமா, வேண்டாமா என்று ஒவ்வொன்றையும் யோசித்து சாப்பிட ஆரம்பித்துவிடுவோம். அதிலும் அதிக ஹீட் கொண்ட பழ வகைகள், காரமான உணவு வகைகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுவோம். வயிற்றுக்குச் சேருமோ சேராதோ, சூட்டைக் கிளப்பிவிடுமோ என்று மிகுந்த பயம் இருக்கும். அதிலும் நான்வெஜ்ஜில் மீன் கோழி சாப்பிடவே பயப்படுபவர்கள் நிறைய பேர். மட்டன் சூட்டைத் தகிக்கும் என்பதால் அதை ஓரளவுக்கு பயமின்றி எடுத்துக்கொள்வோம். அப்படி எதை எதை இந்த சம்மரில் சாப்பிடலாம் என ஆயுர்வேதம் சில தகவல்களை தந்திருக்கிறது.  1. இளநீர்:   வெயிலுக்குக் கண்டிப்பாக எல்லோருமே இளநீர் அருந்த ஆசைப்படுவோம், ஆனால் அதை அருந்துவதற்கு சரியான நேரம் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரைதான். இளநீரில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் இது செரிமானத்தை விரைந்து தூண்டி பசியெடுக்கச் செய்யும். எனவே பசிக்கவில்லை என்பவர்கள் இளநீர் குடித்துப் பாருங்கள் கபகபவென பசியெடுக்கும். இதை குடிப்பதால் இயற்கையான ஆற்றல் மற்றும் சக்தி கிடைக்கிறது.

1 / 5
2. சத்துமாவு :  வெயில்காலத்தில் சைவப் பிரியர்களுக்கு ஏற்ற உணவு இந்த சத்துமாவு. இதில் அதிக சத்துகள் நிறைந்த எல்லா வகையான தானியங்களும் கலந்திருப்பதால் எளிதில் ஆற்றைலைப் பெற முடியும். இது தேவையான அமினோ அமிலங்களை உள்ளடக்கியிருப்பதால், எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், செறிமானத்தை சரியாக வைத்திருக்கவும் பயன்படுகிறது.

2 / 5
3. புதினா :  புதினாவை வெறும் வாசத்திற்காகவும் சமையலில் மேலோட்டமாக தூவவும்தான் பயன்படுத்துவோம, ஆனால் அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. வெறுமனே புதினாவை சமையலில் வாசத்திற்காகப் பயன்படுத்தினாலும் அது நல்ல புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரவல்லது. தேவையற்ற எடையேற்றத்தைத் தவிர்க்க புதினா மிகவும் பயன்படுகிறது. இது தேவையற்ற மசுக்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும், வெயிலில் வரும் பருக்களைத் தடுக்கவும் உதவுகிறது.

3 / 5
4. நெல்லிக்காய் :   நெல்லிக்காய் நம் உடலின் ஆரக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. பழங்காலத்திலிருந்தே நெல்லிக்காயை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் நெல்லிக்காயில் உள்ள சத்தானது 20 ஆரஞ்சிலுள்ள சத்திற்குச் சமம். இதில் அதிக வைட்டமின் இருப்பதால் செறிமானத்தை துரிதப்படுத்துகிறது. இது ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

4 / 5
5. வெள்ளரிக்காய் :  கண்களுக்கு குளிர்ச்சியை மட்டும் ஏற்படுத்தாமல் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், இந்த வெள்ளரிக்காயானது வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்தது. இதிலுள்ள நீர்ச்சத்தானது எலும்பு மண்டலம் மற்றும் இதய மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதை கருப்பு உப்புடன் சேர்த்து சாப்பிடுகையில் எரிச்சலைக் குறைத்து உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

5 / 5
Follow Us
Latest Stories