5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மோடி 3.0… ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்லும் பிரதமர்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணமாக ஜூன் 13ஆம் தேதி இத்தாலி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

மோடி 3.0… ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்லும் பிரதமர்!
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 19:28 PM

மோடியின் இத்தாலி பயணம்: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணமாக ஜூன் 13ஆம் தேதி இத்தாலி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இத்தாலியில் ஜூன் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இத்தாலி அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாசியாவில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்களை கொண்ட ஏழு நாடுகள் இருப்பது ஜி7 அமைப்பாகும். இதில் கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மணி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் நடைபெறும் ஜி7 மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் தலைமையேற்றும் நடத்தும். அந்த வகையில், இந்தாண்டு ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது.

Also Read: அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லையா? மாத்தி மாத்தி பேசும் சுரேஷ் கோபி!

ஜி7 உச்சி மாநாடு: 


இந்த உச்ச மாநாட்டிற்கு தான் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியுறுவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “, இத்தாலியின் புக்லியா பகுதியில் நடைபெற உள்ள G7 உச்சி மாநாட்டிற்கான அழைப்புக்கு நன்றி தெரிவித்து, இத்தாலி பிரதமர் மெலோனி உரையாற்றினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் இருநாட்டுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும்  என்று உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி டெல்லிக்கு வந்தபோது, இருநாடு உறவுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News