5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Suresh Gopi: அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லையா? மாத்தி மாத்தி பேசும் சுரேஷ் கோபி!

வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி வாகை சூடினார். இவர் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எஸ் சுனில் குமாரை தோற்கடித்தார். சுரேஷ் கோபி 4 லட்சத்து 12 ஆயிரத்து 338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 405 வாக்குகள் கிடைத்தது. இதுவரை கேரளாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதில்லை.

Suresh Gopi: அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லையா? மாத்தி மாத்தி பேசும் சுரேஷ் கோபி!
சுரேஷ் கோபி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 16:41 PM

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுரேஷ் கோபி? 2024 மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி பேட்டியிட்டார். இவர் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றார். சுரேஷ் கோபி மூலம் கேரளாவில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் மோடி தலையிலான மத்திய அமைச்சரவையில் சுரேஷ் கோபி மத்திய இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  இந்த  நிலையில், பதவியேற்றுக் கொண்ட ஒரு நாளிலேயே மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ”எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். சினிமாவில் நடிக்க இருப்பதால் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்” எனக் கூறியதாக பேட்டி ஒன்று இணையத்தில் வெளியானது.

இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதவிட்ட  சுரேஷ் கோபி, “மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என்று ஒருசில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் மோடியின் தலைமையில், கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

Also Read: மோடி அமைச்சரவை.. மத்திய அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!

திருச்சூரில் பாஜக:

வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி வாகை சூடினார். இவர் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எஸ் சுனில் குமாரை தோற்கடித்தார். சுரேஷ் கோபி 4 லட்சத்து 12 ஆயிரத்து 338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 405 வாக்குகள் கிடைத்தது. இதுவரை கேரளாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதில்லை.

சுரேஷ் கோபி மூலம் கேரளாவில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. . திருச்சூர் தொகுதியில் கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இந்த தேர்தல் பாஜக வெற்றியை பதிவு செய்திருந்தது.

Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்கள்?

Latest News