5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒடிசா வரலாற்றில் முதல்முறை.. அசத்தும் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!

ஒடிசாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 32 வயதான சோஃபியா ஃபிர்தௌஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஒடிசாவில் 87 ஆண்டு கால தேர்தல்  வரலாற்றில் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெறுகிறார். கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த முகமது மொகிமின் மகள் சோஃபியா களம் கண்டார். இவர் சுமார் 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பூர்ண சந்திர மகாபத்ராவை தோற்கடித்தார். 1937ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் 141 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், அவர்களில் யாருமே இஸ்லாமியர்கள் இல்லை. 32 வயதான சோஃபியா ஃபிர்தௌஸ் தான் அம்மாநிலத்தில் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏவாக திகழ்கிறார்.

ஒடிசா வரலாற்றில் முதல்முறை.. அசத்தும் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!
ஒடிசா பெண் எம்எல்ஏ
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 10 Jun 2024 17:42 PM

ஒடிசாவில் முதல் முஸ்லீம் எம்எல்ஏ: ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு நான்கு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத 24 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. முதல்முறையாக அங்கு பாஜக வெற்றி வாகையை சூடியது. இந்த நிலையில், பாராபதி-கட்டாக் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 32 வயதான சோபியா ஃபிர்தௌஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஒடிசாவில் 87 ஆண்டு கால தேர்தல்  வரலாற்றில் தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெறுகிறார்.

கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த முகமது மொகிமின் மகள் சோஃபியா களம் கண்டார். இவர் சுமார் 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பூர்ண சந்திர மகாபத்ராவை தோற்கடித்தார். 1937ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் 141 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், அவர்களில் யாருமே இஸ்லாமியர்கள் இல்லை. 32 வயதான சோஃபியா ஃபிர்தௌஸ் தான் அம்மாநிலத்தில் முதல் இஸ்லாமிய பெண் எம்எல்ஏவாக திகழ்கிறார்.

கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற, முகமது மொகிம் இந்த தேர்தலிலும் அவர் போட்டியிட இருந்தார். ஆனால், மோசடி வழக்கில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருந்த நிலையில், அவரது மகள் சோஃபியா களமிறக்கப்பட்டு வெற்றி வாகை சூடினார்.

Also Read: அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லையா? மாத்தி மாத்தி பேசும் சுரேஷ் கோபி!

”சரித்திரம் படைத்துள்ளேன்”

இதுகுறித்து அவர் பேசுகையில், “இஸ்லாமிய பெண்ணாக நான் வெற்றி பெற்றுள்ளேன். சரித்திரம் படைத்துள்ளேன். ஆனால், சட்டப்பேரவையில் பெண்கள் பிரதிநிதித்துவம் ஈர்க்கும் வகையில் இல்லை. 147 எம்எல்ஏக்களின் 11 பேர் மட்டுமே பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும். நான் அரசியல்வாதி அல்ல. எனது தந்தை போட்டியிட முடியாத நிலையில், 400-500 ஆதரவாளர்கள் கொண்ட பெரிய கூட்டம் எங்கள் இல்லத்தில் கூடியது.

எனது தந்தையின் கடின உழைப்பையும், கட்டாக்கில் அவர் ஏற்படுத்திய உறுதியான அடித்தளத்தையும் அங்கீகரித்து. அவர்கள் என்னை தேர்தலில் போட்டியிட இறங்க ஏகமனதாக ஆதரித்தனர். இருப்பினும், எனக்கு பயம் இருந்தது. மக்கள் என் தந்தையை நன்கு அறிவார்கள். அவர் 2014ல் தோற்றார். பின்னர் 2019ல் வெற்றி பெற்றார். மக்கள் என் மீது என்னை நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள் என்று யோசித்தேன். ஆனால், அப்பாவுக்கு இருக்கும் நற்பெயர் எனக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது” என்றார்.

Also Read: மோடி அமைச்சரவை.. மத்திய அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!

Latest News