5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bus Accident : நொறுங்கிய பேருந்து.. உடல் நசுங்கி 18 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் சோகம்!

Unnao Bus Accident: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் விரைவுச் சாலையில் இரண்டடுக்கு பேருந்து, பால் வேன் மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Bus Accident : நொறுங்கிய பேருந்து.. உடல் நசுங்கி 18 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் சோகம்!
விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jul 2024 14:37 PM

18 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் விரைவுச் சாலையில் இரண்டடுக்கு பேருந்து, பால் வேன் மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் இரண்டடுக்கு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 35 பேர் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த சாலையின் ஓரமாக கார்ஹா கிராமம் அருகே பால்வேன் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, பின் பக்கமாக பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது. பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது பால்வேன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பால்வேன் மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்தில் போலீசார் வந்தனர். அங்கு காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வெளியான வீடியோ காட்சிகளில் சாலைகளில் உடல்களும், உடைந்து போன பேருந்து பாகங்கள், கண்ணாடித் துண்டுகள் போன்றவையும் சிதறி கிடப்பதைக் காண முடிகிறது.

Also Read: 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட்.. RTI மூலம் வெளியான உண்மை!

நிவாரணம் அறிவிப்பு:


இதனிடையே,  இந்த விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதோடு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். விபத்து பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Also Read:  7 மாநிலங்கள்.. 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஹிமாச்சல் ஏன்?

Latest News