5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SpiceJet : 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட்.. RTI மூலம் வெளியான உண்மை!

PF Pending | ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 2.5 ஆண்டுகளாக பிஎஃப் தொகையை செலுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு EPFO இவ்வாறு பதிலளித்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎஃப் தொகையை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SpiceJet : 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட்.. RTI மூலம் வெளியான உண்மை!
ஸ்பைஸ்ஜெட்
vinalin
Vinalin Sweety | Updated On: 09 Jul 2024 11:14 AM

ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் : ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் தொகையை செலுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் CNBC-ன் TV 18 எழுப்பிய கேள்விக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி இவ்வாறு பதிலளித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது 11,581 ஊழியர்களுக்கு பிஎஃப் தொகையை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி EPFO விதிகளின்படி, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டதாகவும், ஆனால் அதற்கு நிறுவனம் பதிலளிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் நிதி பற்றக்குறையை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக அமைந்துள்ளது.

நிதி பற்றாக்குறை தான் காரணமா?

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு இதுவரை 7.6% சரிந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது சுமார் 86% வரை உயர்ந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நிதி பற்றக்குறை காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை செலுத்துவதில் தாமதம் செய்துள்ளதாகவும், ஜனவரி மாத ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!

கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎஃப் தொகையை செலுத்தவில்லை என செய்தி வெளியான நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதுமட்டுமனறி ஊழியர்களின் ஊதிய நிலுவைகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், முறையாக பிஎஃப் தொகை செலுத்தப்பட்டு வருவதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறிபிட்டுள்ளது.

ஸ்பெஸ்ஜெட் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இண்டிகோ மற்றும் டாடா குழுமத்தை தாண்டி 3வது மிகப்பெரிய விமான சேவையை கொண்ட நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளால கடும் நிதி  நெருக்கடியை சந்தித்து வருகிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இதனை தொடர்ந்து கடந்த 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு, பிஎஃப் தொகையை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.

இதையும் படிங்க : EPFO : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பிஎஃப் கணக்கில் வரப்போகும் ரூ.50,000.. EPFO வெளியிட்ட புதிய அறிவிப்பு!

ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள ஸ்பைஸ்ஜெட்டுக்கு இது மேலும் ஒரு சவாலாக உருவாகலாம் என கூறப்படுகிறது.

Latest News