Vijay Sethupathi: 100 கோடி வசூல் சாதனை செய்தது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’
Maharaja Movie Collection: ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமின்றி, வில்லனாகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை மிகவும் எதார்த்தமாக நடிப்பதில் வல்லவரான விஜய் சேதுபதி, தனி ஹீரோவாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க கடந்த சில வருடங்களாகவே அதிகம் போராடி வந்தார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சலூன் நடத்திக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது மனைவி விபத்து ஒன்றில் இறந்துவிட, மகள் ஜோதியுடன் வசித்து வருகிறார். மகள் ஜோதி ஒரு நாள் வெளியூர் சென்றுவிட, வீட்டில் தனியாக இருக்கும் விஜய்சேதுபதி, காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என புகார் கொடுக்கிறார். போலீசார் லட்சுமி யார் என்று கேட்க, அது யார் என்று சொல்லமுடியாமல் விஜய்சேதுபதி திணறினார், ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல, கடுப்பாகும் போலீசார் இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். படம் குறித்து மக்கள் நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Also read… Movies List: தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது.
Majestic glory for #Maharaja with 100+ crores worldwide at the box office🔥#BlockbusterMaharaja#MakkalSelvan @VijaySethuOffl
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP @Selva_ArtDir… pic.twitter.com/21l9DELci9
— TheRoute (@TheRoute) July 3, 2024
அரண்மனை 4 – க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், படம் வெளியாகி 21 நாட்களை கடந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.