5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓடிடியில் வெளியாகும் டொவினோவின் ‘நடிகர்’ படம்… எப்போது தெரியுமா?

Nadikar Movie OTT: மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகியப் படங்களை இயக்கிய லால் ஜூனியர்  டோவினோ தாமஸை வைத்து இயக்கிய படம் ’நடிகர்’. சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், திவ்யா பிள்ளை, பாலு வர்கீஸ், ஷைன் டாம் சாக்கோ, அனூப் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யாக்சன் கேரி மற்றும் நேஹா நாயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கடந்த மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் டொவினோவின் முந்தைய படங்களை போல வரவேற்பைப் பெறவில்லை. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப்பெற்றது.

ஓடிடியில் வெளியாகும் டொவினோவின் ‘நடிகர்’ படம்… எப்போது தெரியுமா?
‘நடிகர்’ படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2024 17:12 PM

மோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘நடிகர்’ மலையாளப் படம் ஜூன் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக அறிமுகமானார் டொவினோ தாமஸ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 2018 படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றதுடன் பலவிருதுகளை வென்று பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனை படைத்தது. மலையாளத் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் டொவினோ தாமஸின் நடிப்பில் வெளியான மாயநதி, மின்னல் முரளி, தல்லுமாலா ஆகிய படங்கள் மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடித்து வெளியான அன்வேஷிப்பின் கண்டேதும் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகியப் படங்களை இயக்கிய லால் ஜூனியர்  டோவினோ தாமஸை வைத்து இயக்கிய படம் ’நடிகர்’. சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், திவ்யா பிள்ளை, பாலு வர்கீஸ், ஷைன் டாம் சாக்கோ, அனூப் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யாக்சன் கேரி மற்றும் நேஹா நாயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கடந்த மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் டொவினோவின் முந்தைய படங்களை போல வரவேற்பைப் பெறவில்லை. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப்பெற்றது.

Also read… கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் அதிரடியாக கைது – நடந்தது என்ன?

ரூ.30 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.10 கோடி வசூலைக் கூட தாண்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read… இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா அர்ஜூன் – உமாபதி ராமையா வெட்டிங் போட்டோஸ்

Latest News