5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘அந்தகன்’ படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழுவினர்.. ஆகஸ்டில் வெளியீடு..!

90 காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகாராக இருந்த நடிகர்  பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் எந்த தேதி என்பது குறித்து தெரிவிக்கவில்லை.  பிரச்சாந்தின் ரசிகர்கள் அவரின் ரீ-எண்ட்ரியை காண ஆவலாக காத்திருக்கின்றனர். 

‘அந்தகன்’ படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழுவினர்.. ஆகஸ்டில் வெளியீடு..!
அந்தகன்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 30 Jun 2024 07:26 AM

நடிகர் பிரசாந்த 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர். தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு அதிக அளவில் ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகர்களையும் பெற்றிருந்தார். உலக அழகி ஐஸ்வர்யாவுடன் ஜீன்ஸ் திடைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் கவனம் பெற்றார். சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த பிரசாந்த் திடீரென பின்னர் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் விஜய் நடித்திருக்கும் GOAT படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Guruvayoor Ambalanadayil : மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்.. ரம்பா பாட்டை கையிலெடுத்த மலையாளப் படம்.!

பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்க கமிட்டானார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bezique Streams (@beziquestreams)

நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Also Read: Lpg Gas: ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பண்டிகை நாட்களில் படத்தின் போஸ்டர் வாழ்த்துகளுடன் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய் நடித்திருக்கும் GOAT படத்திலும் பிரசாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News