5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வங்கியில் 3 வீடுகளை அடமானம் வைத்த தமன்னா… என்ன காரணம்?

Actress Tamannaah Bhatia: சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, சந்தோஷ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வங்கியில் 3 வீடுகளை அடமானம் வைத்த தமன்னா… என்ன காரணம்?
தமன்னா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jul 2024 09:43 AM

நடிகை தமன்னா மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 3 வீடுகளை வங்கியில் அடமான வைத்தது தொடர்பான செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகனானார் நடிகை தமன்னா. தமிழில் 2006-ம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் தமன்னா. அதனைத் தொடர்ந்து கல்லூரி படித்தில் நடித்ததன் மூலம் தனித்து தெரியப்பட்டார் தமன்னா. தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பிசியாக நடிக்க தொடங்கினார். சுறா, வீரம், அயன் என அனைத்தும் ரசிகர்களின் மனதில் அவர் நீங்க இடம் பிடிக்க உதவியது. படிக்காதவன், பையா படங்களில் தமன்னாவின் நடிப்பு தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பான் இந்திய அளவில் தமன்னா பிரபலம் அடைந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய படங்களில் நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, சந்தோஷ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தியேட்டரில் வசூலில் பட்டையை கிளப்பிய இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது. அப்போது இந்தப் படத்தில் தமன்னா நடித்த காட்சிகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வைரலாக்கினர்.

Also read… கவினின் ‘ஸ்டார்’ படத்தின் ரியல் பாக்ஸ் ஆபிஸ் எவ்ளோ தெரியுமா? இயக்குநர் சொன்ன உண்மை!

இந்த நிலையில் தமன்னாவுக்கு மும்பை அந்தேரி மேற்கு வீர தேசாய் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 வீடுகள் உள்ளன. இதை இந்தியன் வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார். மேலும் மும்பை ஜுஹு பகுதியில் 6,065 சதுர அடியில் அலுவலகம் ஒன்றை மாதம் ரூ.18 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். ஐந்து வருடத்துக்கு இந்த வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவற்றுக்கு ரூ.4.7 லட்சம் முத்திரை கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த கமர்ஷியல் இடத்தை தமன்னா என்ன செய்யப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. தமன்னா தயாரிப்பில் இறங்கி வெப் சீரிஸ் தயாரிக்க இருக்கிறார். அதனால்தான் அவர் அலுவலக இடத்தை வாங்கியுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் உள்ள சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகை தமன்னா, ஜான் ஆப்ரஹாமுடன் இப்போது ‘வேதா’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். இது, ஆக.15-ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்து இந்தியில் ஸ்ட்ரீ 2, தெலுங்கில் ஒடேலா 2 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Latest News