5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Video: சூரியின் ’கருடன்’ ரிலீஸ் எப்போ? வீடியோவுடன் அறிவித்த படக்குழு!

Garudan - Release Date Announcement | வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 May 2024 17:19 PM

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாப்பத்திறத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சூரி. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை வீடியோ மூலம் படக்குழு தெரிவித்துள்ளது. கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Stories