Video: ‘ஏன்டி என்ன’… ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்தின் முதல் சிங்கிள் இதோ!
Yendi Yenna - Lyrical | விமல் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, ‘ஏன்டி என்ன’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. மைக்கேல் ராஜா எழுதியுள்ள இந்த பாடலை ஸ்டீபன் செக்கரியா மற்றும் மால்வி சுந்தரேசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.